scorecardresearch

பெண் யூடியூபரின் ஹனி ட்ராப்.. நெல்லை தொழிலதிபர் சிக்கியது எப்படி?

ஹனி ட்ராப் ஆசைக்காட்டி தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறித்ததாக பிரபல யூடியூபர் நம்ரா காதிர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Delhi-based YouTuber Namra Qadir
டெல்லி யூடியூபர் நம்ரா காதிர்

டெல்லியை பூர்விகமாக கொண்டவர் பிரபல பெண் யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரது கணவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விளம்பட படம் சம்பந்தமாக யூடியூபர் நம்ரா காதிர்-ஐ அணுகியுள்ளார்.

இந்த நிலையில் இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்த, ஹோட்டல் அறையில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
இதையடுத்து யூடியூபர் நம்ரா காதிரிடம் மாற்றம் தெரிந்துள்ளது.
தொடர்ந்து பணம் கேட்டு அவரிடம் மிரட்டியுள்ளார். இதுவரை ரூ.70 லட்சம் வரை அவரிடம் இழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தொழிலதிபர் குர்கான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் பெண் யூடியூபர் நம்ரா காதிர்-ஐ கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது கணவரை தேடிவருகின்றனர்.
நம்ரா காதிருக்கு யூடியூப்பில் 6 கோடி சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராமில் 2 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.
இவர் மீது 388 (மிரட்டி மிரட்டி பணம் பறித்தல்), 406 (குற்றவியல் நம்பிக்கை மீறல்), 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), 34 மற்றும் 328 (காயப்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Youtuber namra qadir held for extorting rs 70 lakh from businessman