சென்னை மதுரவாயல் சாலையில் தனது சகோதரனை பள்ளியில் விடுவதற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற சோகோ நிறுவனத்தை சேர்ந்த 22 வயது சாப்ட்வேர் என்ஜினீயர், விபத்திற்கு உள்ளாகி உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஓட்டுநர்கள் இருவரை இன்று காவல்துறை கைது செய்தனர்.
Advertisment
ஷோபனா (வயது 22) தனது சகோதரனுடன், மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் பயணித்தபோது, வேன் ஒன்று ஷோபனாவின் வாகனத்தை உரசியது. அதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுகையில், பின்னால் வந்த மணல் லாரி ஷோபனாவின் மீது ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அவரது சகோதரர் காயங்களுடன் உயிர்தப்பினார்.
விபத்து நடந்த மதுரவாயல் பைபாஸ் சாலையில், பள்ளங்களை சரி செய்ய பல குழுக்களை அனுப்பப்பட்டு, சேதத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்தனர். இப்பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் மக்கள் இதைக்குறித்து நீண்டகாலமாக புகார் எழுப்பி வந்துள்ளனர்.
சோகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தனது ட்விட்டரில், தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையிடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து, விபத்துக்குக் காரணமான வேன் ஓட்டுநர் பார்த்திபன் மற்றும் லாரி ஓட்டுநர் மோகன் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil