தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக பாதிப்புகள் பதிவாகும் மாவட்டமாக சென்னை உள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு 6000ஐ தாண்டி வருகிறது.
சென்னை பெருநகர மாநகராட்சியின் தரவுகளின் படி மே 13 ஆம் தேதி சென்னையில் 983 வீதிகளில் தலா 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உதாரணமாக, ஐ.எம்.எச் தெருவில் 82 பேரும், கொன்னூர் ஹை ரோட்டில் 72 பேரும், புதுப்பேட்டையில் உள்ள டிரைவர் ஸ்ட்ரீட்டில் 75 பேரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்த பகுதிகள் போக்குவரத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட கட்டுப்பாட்டு மண்டலங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் ஆகும். இங்குள்ள 80% வீதிகளில் கிட்டதட்ட தலா 10-19 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. மேலும், 136 தெருக்களில் 20-29 பேருக்கும், 44 வீதிகளில் 30-39 பேருக்கும், ஆறு தெருக்களில் 50-59 பேருக்கும், மூன்று வீதிகளில் 60-69 பேருக்கும், இரண்டு வீதிகளில் 70-79 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்துள்ளது. குறிப்பாக ஐ.எம்.எச் தெருவில் மட்டும் 82 பேர் பாதித்துள்ளனர்.
தேனாம்பேட்டை மண்டலத்தில் பெரும்பாலான வீதிகளில் தலா 10 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதித்துள்ளது. இருப்பினும், 50-க்கும் மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்ட ஒரு தெருவும் இந்த மண்டலத்தில் உள்ளது.
அண்ணா நகரில் 10 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள கொரோனா பாதிப்புகளைக் கொண்ட 81 வீதிகள் மட்டுமே உள்ளன, ஆனால் இங்கு 50 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் கொண்ட மூன்று வீதிகள் உள்ளன. மேலும், இங்கு 70க்கு மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்ட ஒரு தெருவும், 80க்கும் மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்ட ஒரு தெருவும் உள்ளது. சென்னையிலே அதிகமாக அண்ணா நகர் மண்டலத்தில் மொத்தம் 4,598 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மத்திய சென்னையில் உள்ள கோடம்பாக்கம் மண்டலத்தில் 120 தெருக்களில் 10 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ளது. சென்னையில் தொற்று பாதிப்பில் கோடம்பாக்கம் 4,214 செயலில் உள்ள பாதிப்புகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் இங்கு 50 க்கும் மேற்பட்ட பாதிப்புகளைக் கொண்ட ஒரு தெரு கூட இல்லை. அதன் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பெரும்பாலானவை 10-19 பாதிப்புகள் மட்டுமே உள்ளன.
2011 ஆம் ஆண்டில் சென்னை பெருநகர மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கிய அம்பத்தூர் மண்டலம், 4,095 செயலில் உள்ள பாதிப்புகளுடன் சென்னை மண்டலங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
நீண்ட காலமாக சென்னையில் அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள பாதிப்புகளை கொண்டிருந்த தேனாம்பேட்டை மண்டலம் இப்போது 3,746 பாதிப்புகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
தற்போது, நகரத்தில் ஒரு மண்டலத்தில் மட்டுமே 1,000 க்கும் குறைவான செயலில் உள்ள பாதிப்புகள் உள்ளன. அது மணலி மண்டலம், இங்கு 806 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர். இந்த மணலி மண்டலத்தில் இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. இதுவரை 52 இறப்புகளை மட்டுமே பதிவு செய்துள்ளது. இதன் சிஎஃப்ஆர் விகிதம் 0.88%.
சென்னையில் மிக குறைவான செயலில் உள்ள பாதிப்புகளைக் கொண்ட மண்டலமாக சோழிங்கநல்லூர் உள்ளது. இங்கு தற்போது 1,542 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு இறப்பு விகிதமும் 0.55% ஆக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil