Advertisment

Galaxy S10 : 80 நாட்களில் 10 லட்சம் போன்களை விற்றுத் தீர்த்த சாம்சங்...

அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலும் தங்களின் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது சாம்சங் நிறுவனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
1 million Samsung Galaxy S10 5G sold

1 million Samsung Galaxy S10 5G sold

1 million Samsung Galaxy S10 5G sold : சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி S10 (5G variant) தென்கொரியாவில் ஏப்ரல் 5ம் தேதி வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் வெளியான 80 நாட்களில் ஒரு மில்லியன் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளன என்று யோன்ஹாப் நியூஸ் ஏஜென்ஸி அறிவித்துள்ளது.

Advertisment

நாள் ஒன்றுக்கு சராசரியாக 15000 யூனிட் ஸ்மார்ட்போன்களை விற்று சாதனை புரிந்திருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்த மாபெரும் இமாலய சாதனைக்கு என்ன காரணம் என்றால், தங்களின் போன்களை வாங்குவதற்காக பல்வேறு மானிய சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது தான்.

மேலும் படிக்க : செப்டம்பரில் வெளியாகிறது ஹூவாய் மேட் எக்ஸ்

சாம்சங் நிறுவனத்தின் சொந்த நாடான தென் கொரியாவில் இந்த போன் மட்டும் இவ்வளவு விற்பனையாகியுள்ளது என்றாலும், எல்.ஜி. நிறுவனத்தின் V50 ThinQ - ஸ்மார்ட்போனும் 2,80,000 யூனிட்டுகளை மே 10ம் தேதி முதல் இன்றைய தேதி வரை விற்றுத் தீர்த்துள்ளது.

தென்கொரியா மட்டுமல்லாமல் 5ஜி சேவைகளைக் கொண்டுள்ள நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளிலும் தங்களின் கேலக்ஸி S10 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. கோடைகாலத்தின் இறுதியில் ஜெர்மனியிலும் இந்த போனும் விற்பனைக்கு வைக்கப்பட்டது.  இந்தியாவில் 5ஜி உள்கட்டமைப்புகள் இன்னும் உருவாக்கப்படாததால் இந்த வேரியண்ட்டுகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

மேலும் படிக்க : மீண்டும் தாமதமான சாம்சங்கின் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் அறிமுக விழா

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment