2023-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், வாட்ஸ்அப் உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. இந்த ஆண்டு மெசேஜிங் தளத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஏனெனில் மெட்டா உண்மையிலேயே ஓவர் டிரைவ் பயன்முறையில் நுழைந்தது. பயனர் அனுபவத்தை மேம்படுத்த ஒவ்வொரு மாதமும் முக்கிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்தது.
ஷேட் லாக்
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பல அம்சங்களில், ஷேட் லாக் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்ததது. இதைப் பயன்படுத்த வாட்ஸ்அப் பக்கம் சென்று எந்த ஷேட்டை லாக் செய்ய வேண்டுமோ அந்த ஷேட்டை லாங்- பிரஸ் செய்து 3 புள்ளி பட்டனை கிளிக் செய்தால் “Locked Chats” என்ற ஆப்ஷன் வரும் அதை கொடுத்து லாக் செய்யலாம். பாஸ்வேர்ட், fingerprint, or face unlock கொடுத்து லாக் செய்யலாம்.
வாய்ஸ் ஸ்டேட்டஸ்
இந்த ஆண்டு வெளியிடப்பட்டது, வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சம். டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் போலவே வாய்ஸ் ஸ்டேட்டஸ் அம்சத்தையும் பயன்படுத்தலாம்.
பின் ஷேட்ஸ், மெசேஜஸ்
முக்கிய நபர் அல்லது குரூப் ஷேட்டை வாட்ஸ்அப்பின் டாப் பக்கத்தில் பின் செய்து கொள்ளலாம். இதுவும் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட முக்கிய அம்சமாகும். பயனர்களின் வரவேற்பை பெற்ற அம்சமாகும். தனி நபர் அல்லது குரூப் ஷேட்டை லாங் பிரஸ் செய்து பின் ஷேட் செய்யலாம்.
ஸ்கீரின் ஷேரிங்
இதுவும் மற்றொரு முக்கிய அம்சமாகும். கூகுள் மீட், ஜூம் போன்ற செயலியில் உள்ள போது வாட்ஸ்அப்பிலும் ஸ்கீரின் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ காலில் இருக்கும் போது எளிதாக ஸ்கீரின் ஷேரிங் ஐகான் (a phone with an arrow) கிளிக் செய்து ஸ்கீரின் ஷேர் செய்யலாம்.
Silence Unknown Callers
இது பெரிதும் பயனுள்ள அம்சமாகும். தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை தானாகவே சைலன்ஸ் செய்து விடும். இது பயனரின் தனியுரிமைகளை பாதுகாக்க கொண்டு வரப்பட்டது. Settings > Privacy > Calls > Silence Unknown Callers கொடுத்தால் தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் சைலன்ஸ் ஆகி விடும். இருப்பினும் நீங்கள் அந்த எண் குறித்து call log-ல் தெரிந்து கொள்ளலாம்.
இதோடு மட்டுமல்லாமல் Companion Mode ஒரே வாட்ஸ் அப் அக்கவுண்டை பல டிவைய்களில் பயன்படுத்தும் அம்சம், HD போட்டோ ஷேரிங், வாட்ஸ்அப் சேனல் எனப் பல்வேறு அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து பயனர்களின் வரவேற்பை பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/whatsapp-2023-best-features-roundup-9087577/
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“