நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்ம்கள் மக்களை கவரும் டி.வி நிகழ்ச்சிகளை வெளியிட்டு வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் 2023-ல் இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டி.வி நிகழ்ச்சிகள் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் முதல் இடங்களைப் பிடித்துள்ளது. ஷாஹித் கபூரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டிஜிட்டல் அறிமுகமான ‘ஃபர்ஸி’ முதல் ஜியோ சினிமாவின் ‘பிக் பாஸ் 17’ வரை இந்த ஆண்டு பல்வேறு நிகழ்ச்சிகளை இடம் பிடித்துள்ளன.
கூகுளின் அறிக்கையின்படி, பார்ஸி', பிக் பாஸ் 17, 'ஸ்கேம் 2003, சூப்பர் நேச்சுரல் த்ரில்லர், அசுர், ராணா நாயுடு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்டு பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளாக உள்ளன.
Wednesday, தி லாஸ்ட் ஆஃப் அஸ், கன்ஸ் & குலாப்ஸ், செக்ஸ்/லைஃவ், டாசா கபார் ஆகியவையும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“