10 tips to improve internet privacy data policing methods : தற்போது அடிக்கடி மொபைல் ஹேக்கிங், பெர்சனல் மெயில் ஐடி ஹேக்கிங் போன்ற பிரச்சனைகளால் அனைவருக்கும் சற்று பயம் உருவாவது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது. இணைய தளங்களில் உங்களின் தனித்தகவல்களை எப்படி பாதுகாப்பது என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
Social privacy settings
சமூக வலைதளங்களில் இருக்கும் ப்ரைவசி செட்டிங்குகள் உங்களின் தனித்தகவல்களை பாதுகாக்க உதவும். அனைத்து சமூக வலைதள பக்கங்களிலும் நாம் உள்ளீடாக தரும் அனைத்து தகவல்களையும் யார் வேண்டுமானாலும் காண இயலும். இதனை தவிர்க்க சோசியல் ப்ரைவசி செட்டிங்கில் சென்று அனைத்து செட்டிங்குகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள்
Don’t use public storage
உங்களின் தனிப்பட்ட தகவல்களை எக்காரணம் கொண்டும் பொதுவான சேமிப்பு தளங்களில் பாதுகாத்து வைக்க நினைக்காதீர்கள். உதராணமாக உங்களின் அனைத்து வங்கிக் கணக்குகள், பாஸ்வேர்ட்கள் ஆகியவற்றை கூகுள் டாக்ஸில் சேமித்து வைப்பது மிகப்பெரும் பிரச்சனைக்கு தான் வழி வகுக்கும். ட்ராப்பாக்ஸிலும் முக்கியமான முக்கியமான ஆவணங்களை சேமித்து வைக்காதீர்கள்.
Evade Tracking
இண்டெர்நெட்டில் நீங்கள் தேடும், பார்க்கும் அனைத்து விசயங்களையும் ட்ராக் செய்ய இயலும். இன்காக்னிட்டோ மோடும் உங்களுக்கு உதவாது. அதனால் முடிந்த வரை ப்ரைவேட் ப்ரௌசிங்கை தேர்வு செய்யுங்கள். காஸ்பெர்ஸ்கை இண்டெர்நெட் செக்யூரிட்டி மூலம் ப்ரைவேட் ப்ரைஸிங்கை தேர்வு செய்து இண்டெர்நெட் ட்ராக்கிங்கில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க : இந்த ஆண்டில் வெளியான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன?
Private E-mail address and Phone number
உங்களின் மெயின் மெயில் ஐ.டி மற்றும் போன் நம்பரை ப்ரைவேட்டாகவே வைத்திருங்கள். இதை எங்காவது பகிரும் போது தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான போன்கால்கள் மற்றும் மெயில்களை நாம் ரிசிவ் செய்ய வேண்டியிருக்கும். இதற்கு மாற்றாக கூடுதலாக ஒரு மெயில் ஐ.டி. மற்றும் சிம் கார்டுகளை ஆன்லைன் ஷாப்பிங் போன்ற சமாச்சாரங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
Messaging apps with end-to-end encryption
எண்ட் - டூ - எண்ட் என்கிரிப்டட் மெசேஜிங் ஆப்களை மட்டும் பயன்படுத்துங்கள். 100% பாதுகாப்பானது என்று கூற முடியாது என்றாலும், இந்த சேவைகளை வழங்கும் சர்வீஸ் ப்ரொவைடர்களாலும் கூட உங்களின் உரையாடல்களை பார்க்க முடியாது. ஃபேஸ்புக் மெசெஞ்சர், டெலிகிராம் மற்றும் கூகுள் போன்றவை எண்ட் - டூ - எண்ட் என்கிரிப்டட் வசதிகளை வழங்குவதில்லை.
Use secure passwords
அனைத்து பாஸ்வேர்ட்களையும் முறையாக ஞாபகத்தில் வைத்திருப்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். ஆனாலும் முடிந்த வரை 12 கேரக்டர்களுக்கு குறைவில்லாமல் பாஸ்வேர்ட்களை செட் செய்யுங்கள். ஒவ்வொரு சேவைக்கும் வேறுவிதமான பாஸ்வேர்ட்களை பயன்படுத்துங்கள்.
Review permissions for mobile apps
உங்களின் காண்டாக்ட் டீடெய்ல்கள், ஸ்டோரேஜ், போட்டோக்கள் போன்ற தகவல்களை அக்செஸ் செய்து கொள்ள செயலிகளில் இருந்து பாப்-அப்கள் உருவாகும். அனைத்தையும் அக்செப்ட் செய்யாமல் ரிவ்யூ செய்து தேவையான மாற்றத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.
Secure your phone and computer with passwords
போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு கடவுச்சொற்கள் மிகவும் முக்கியமானவை. அவற்றை தவறாமல் செட் செய்வது மிகவும் நலமான காரியம். 6 இலக்க எண்கள் அல்லது எழுத்துகள் கொண்ட பாஸ்வேர்ட்களை நான்கு இலக்க எண்கள் மற்றும் ஸ்கிரீன் லாக் பேட்டர்களுக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
Disable lock screen notifications
ஸ்கிரீனில் தோன்றும் நோட்டிஃபிகேசன்களையும் கொஞ்சம் டிஸேபிள் செய்து வைக்கலாம். கொஞ்சம் சென்சிடிவான செய்திகள் என்றால் இந்த செட்டிங் உங்களை பாதுகாக்கும். இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை லாக் செய்திருக்கும் ஸ்கிரீனில் இருந்தும் கண்டு கொள்ளலாம்.
Stay private on Wi-Fi networks
வெளியே இருக்கும் பொதுவான வை-ஃபை நெட்வொர்க்கில் இருந்து மிகவும் முக்கியமான தகவல்களை ஷேர் செய்வதை முடிந்த வரையில் தவிர்த்துவிடுங்கள். மிகவும் முக்கியமான தேவைக்காக நீங்கள் இதனை பயன்படுத்துகிறீர்கள் என்றால் முடிந்த வரை வி.பி.என் கனெக்சன் மூலமாக நெட்டினை பெற முயற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.