Advertisment

நீங்க இனி மாறித்தான் ஆகணும்: தமிழகத்தில் பேட்டரி வாகனங்களுக்கு 100% வரி விலக்கு

மின்-வாகனம் வாங்குபவர்கள் செலுத்த வேண்டியதெல்லாம், இரு சக்கர வாகனங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1,200 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 2,500 பதிவு கட்டணம் மட்டுமே.

author-image
WebDesk
New Update
100 percent tax exemption for electric vehicles tamil news

100% tax exemption for electric vehicles

Tax Exempt for e-vehicles Tamil News: உலகமே மின்சாரம் மற்றும் பேட்டரி இயக்கத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகனங்களுக்கு 100 சதவிகித வரி விலக்கை மாநில அரசு அறிவித்திருக்கிறது. மின்சார வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் தூய்மையான எரிசக்தி வாகனங்களைச் சொந்தமாக்க விரும்புவோர் இந்த திருவிழா பருவத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிற போக்குவரத்து வாகனங்களுக்கும் வரி விலக்கு நீட்டிக்கப்படுகிறது.

Advertisment

கடந்த திங்கட்கிழமையன்று கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர் வழங்கிய அரசாணையில், நவம்பர் 3 முதல் டிசம்பர் 31, 2022 வரை, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும் என மாநில அரசு குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மாநில அரசாங்கத்தின் முடிவு மின்சார வாகன விற்பனையில் மிகப் பெரிய உந்துதலை வழங்கும் என்றும் மேலும், மாசுபாட்டைக் குறைக்க உதவும் என்றும் போக்குவரத்து ஆணையர் டி.எஸ். ஜவஹர் கூறினார். போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு 50% வரி விலக்கு அளிக்கப்பட்ட போதிலும், மாநிலத்தில் விற்பனை குறைவாகவே இருந்தது என்றும் அவர் கூறினார்.

கடந்த நவம்பரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குப் போக்குவரத்து ஆணையர் எழுதிய கடிதத்தின் முடிவாகவே இந்த 100% வரி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது பற்றி மாநில போக்குவரத்துத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், டெல்லி போன்ற பல மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வெவ்வேறு சதவீதங்களுக்கு வரிச்சலுகைகளை அளித்து வருகின்றன. ஆனால் தமிழகம் போன்ற ஒரு பெரிய மாநிலம் 100% விலக்கு அளிப்பது இ- விற்பனையை ஊக்குவிக்க வழிவகுக்கும். மேலும், மின்-வாகனம் வாங்குபவர்கள் செலுத்த வேண்டியதெல்லாம், இரு சக்கர வாகனங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.1,200 மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 2,500 பதிவு கட்டணம் மட்டுமே. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகச் சாலை வரியைத் தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கையை மின்சார வாகன உற்பத்தியாளர்கள் வரவேற்றனர்.

திருவிழா சலுகைகள்

ஏத்தர் எனர்ஜியின் தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் சிங் போகேலா கூறுகையில், “கடந்த சில நாட்களாக மின் வாகனத் தொழிலில் முற்போக்கான கொள்கைகள் தொடர்ந்து நடைமுறைக்கு வந்துள்ளன. 4% சாலை வரியை நீக்குவது அதிகப்படியான செலவுகளைக் கணிசமாகக் குறைக்கும். இந்த தீபாவளி, சென்னையில் ஏத்தர் 450 எக்ஸ் வெளியிடுவதற்கு சரியான நேரம். சென்னை மற்றும் கோவையில் வசிப்பவர்கள், இப்போது ஏத்தர் ஸ்கூட்டர்களை வாங்கும்போது கிட்டத்தட்ட, 6,900 சேமிப்பினை பெறுவார்கள். இது முழுத் தொழிலுக்கும் வரவேற்கத்தக்க நடவடிக்கை” என்று கூறினார்  ரவ்னீத்.

“மின்சார வாகனங்களை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இருப்பினும், கோவிட் -19  தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்து தனியார் மோட்டார் வாகனங்களின் விற்பனை வானளவு உள்ளது. தனியார் மோட்டார் வாகனங்கள் மீது அதிக நம்பகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, புதிய வாகனங்களை வாங்குவதோடு பழைய வாகனங்கள் வாங்குவதைக் கருத்தில் கொள்வது நல்லது” என இந்தியப் போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கை நிறுவனத்தைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் கூறுகிறார். மேலும், இது அமைப்பில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும் என்றார். அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்களை ஊக்குவிப்பது, சுற்றுச்சூழலுக்குத் தூய்மையான ஆற்றல் மூலம் முழுமையாக ஆதரிக்கப்பட்டால் மட்டுமே சிறந்தது என்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"

Taxes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment