ஒரே நேரத்தில் 1000 ரோபோக்கள் நடனமா? வியக்க வைக்கும் கின்னஸ் சாதனை

இத்தாலியில் ஒரே இடத்தில் நின்று நடனமாடிய ரோபோக்களின் கின்னஸ் சாதனை இணையத்தில் வைரலாகி வருகிறது.

இத்தாலி, ரோம் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் கின்னஸ் சாதனை நடைபெற்றது. இந்தச் சாதனையில் 1372 ரோபோக்கள் பங்கேற்றது. இந்த நிகழ்வில், அனைத்து ரோபோக்களும் வரிசையாக நிருத்தி வைக்கப்பட்டு, நடனம் ஆடும்படி ப்ரோகிராம் செய்யப்பட்டிருந்தது. ஒரே நேரத்தில் அனைத்து ரோபோக்களும் சமமாக நடனம் ஆடியது. குறிப்பாக அவை அனைத்தும் அங்கு இசைக்கப்பட்ட இசைக்குச் சரிசமமாக ஆடின.

இந்த ரோபோக்களை “உப்டெக் ரோபோடிக்ஸ்” என்ற சீன நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஒரு ரோபொ 40 சென்டி மீட்டர் உயரம் உடையது. ஒவ்வொன்றுக்கும் அலுமினியம் அலாய் கோட்டிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் தனியார் தொலைக்காட்சிக்காக எடுக்கப்பட்ட இந்தச் சாதனை வீடியோ தற்போது இணையதளத்தில் பிரபலமாகி வருகிறது.

×Close
×Close