பூமிக்கு மிக அருகில் மணிக்கு 50,000 கி.மீ வேகத்தில் இன்று (அக்.9) ஒரு சிறுகோள் ஒன்று வர உள்ளதாக நாசா கூறியுள்ளது. சிறுகோள் 2023 TL என்று பெயரிடப்பட்ட சிறுகோள் தான் பூமியை நெருங்கி வர உள்ளது.
140 அடி அகலம் கொண்ட இந்த சிறுகோள் கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து 3.1 மில்லியன் கி.மீக்கு பூமியை நெருங்கி வர வாய்ப்புள்ளதாக நாசா கூறியுள்ளது. இந்த சிறுகோள் மணிக்கு 50,124 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி விரைந்து வருகிறது எனவும் கூறியுள்ளது.
இது ஆபத்தானதா?
நாசாவின் கூற்றுப்படி, இந்த சிறுகோள் அபாயகரமான பொருளாக வகைப்படுத்தும் அளவுக்கு பெரியதாக இல்லை. நாசா கருத்துப் படி அபாயகரமான சிறுகோள் என்பது 492 அடி அகலத்தில் இருக்க வேண்டும் மற்றும்
7.5 மில்லியன் கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்லக் கூடியதாக இருக்கும் என்றும் கூறியது.
இந்நிலையில் சிறுகோள் 2023 TL , 140 அடி அகலம் மட்டுமே கொண்டுள்ளது. அதனால் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் இது ஒரு விமானத்தை விட பெரியதாகும்.
சிறுகோள்: இதற்கும் உதவும்
சிறுகோள்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் மற்றும் பூமியில் உள்ள உயிர்களை கூட அழிக்கும் திறன் கொண்டவை என்பதை நாம் அறிவோம். மறுபுறம், இந்த விண்வெளி பாறைகள் (சிறுகோள்) நீர், கனிமங்கள் மற்றும் உலோகங்கள் போன்ற மதிப்புமிக்க வளங்களை நமக்கு வழங்க முடியும்.
மேலும், விஞ்ஞானிகள் சிறுகோள்களை கொண்டு ஆரம்பகால சூரிய குடும்பம் மற்றும் கிரகங்கள் உருவாகும் போது இருந்த நிலைகள் பற்றி ஆய்வு செய்ய பயன்படுத்துவர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“