/tamil-ie/media/media_files/uploads/2019/08/nasa-2.jpg)
2 Nasa astronauts spacewalk live stream
2 Nasa astronauts spacewalk live stream : விண்வெளி வீரர்கள் இருவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ( International Space Station ) வெளியே ஸ்பேஸ்வாக் ( spacewalk ) செய்ய இருப்பதை லைவ்வில் மக்களுக்கு ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது நாசா. இந்த நிகழ்வு விண்ணில் சுமார் ஆறரை மணி நேரம் நடைபெற உள்ளாது. இந்திய நேரப்படி ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி மாலை 05:50 மணியில் இருந்து அவர்கள் நடக்க உள்ளனர். ஆனால் நேரலை அதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே நடைபெற உள்ளது.
2 Nasa astronauts spacewalk live stream
இந்த நிகழ்வை பார்க்க விரும்புகின்றவர்கள் நாசாவின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இந்த ஸ்பேஸ்வாக்கினை எக்ஸ்பெடிசன் 60 ஃப்ளைட் பொறியாளர்கள் நிக் ஹௌஜ் மற்றும் ஆண்ட்ரூ மோர்கன் ஆகியோர் மேற்கொள்ள இருக்கின்றனர். க்வெஸ்ட் ஏர்லாக்கில் துவங்கி சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேசனின் ஹார்மோனி மோடியூலில் இருக்கும் அடாப்டர் 3 வரை நடக்க உள்ளனர். அங்கு செல்லும் அவர்கள், எச்.டி. டெலிவிசன் கேமராக்களை ஸ்டார்போர்ட் ட்ரஸ்ஸில் இணைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பூமிக்கு விடை கொடுத்த சந்திரயான்: இஸ்ரோ மகிழ்ச்சி
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.