/indian-express-tamil/media/media_files/2025/10/01/vivo-v60e-2025-10-01-16-35-01.jpg)
200MP கேமரா, 6,500mAh பேட்டரி, 90W பாஸ்ட் சார்ஜிங்... அக்.7-ல் அறிமுகமாகிறது விவோ லேட்டஸ்ட் போன்!
விவோ நிறுவனம் இந்த அக்டோபர் மாதம் 3 பெரிய அறிவிப்புகளை வெளியிட தயாராகி வருகிறது. இம்மாதத்தின் தொடக்கத்தில் விவோ V60e-ஐ இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகு, அடுத்தகட்டமாக அதன் பிரத்யேக ஓ.எஸ் Origin OS-ன் உலகளாவிய வெளியீடு, நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வரிசையான விவோ எக்ஸ்300 சீரிஸ்-ஐ அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றை விவோ மேற்கொள்ள உள்ளது.
அக்.7 அன்று விவோ V60e இந்தியாவில் அறிமுகம்
விவோ V60e ஆனது அக்டோபர் 7 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து விவோ தனது வெப்சைட், சமூக ஊடகங்களில் தகவல் வெளியிட்டு வருகிறது. இந்த ஃபோன் வளைந்த சேஸ்சிஸ் (curved chassis), ஐபோன் 16/17-ஐப் போன்ற செங்குத்தான கேமரா அமைப்பைக் கொண்டு, விவோ V60 போன்றே காட்சியளிக்கிறது. மிக மெல்லியதாகவும், எடை குறைவாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மெல்லிய வடிவமைப்பிற்குள் 6,500mAh என்ற பிரம்மாண்டமான பேட்டரியை விவோ பொருத்தியுள்ளது. இது 90W பாஸ்ட் சார்ஜிங்-ஐ ஆதரிக்கும், அதற்கான சார்ஜர் பெட்டியிலேயே வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
விவோ V60e-ன் மிக முக்கியமான சிறப்பம்சமே அதன் கேமரா அமைப்புதான். பின்புறத்தில் 200 mp “Ultra HD clarity” முதன்மை கேமரா, ஆப்டிகல் ஸ்டெபிலைஸ்டு லென்ஸ் (OIS) உடன் வருகிறது. இந்த கேமரா 85mm closeup portraits மற்றும் பிரத்யேக “AI Festival Portrait” மோட் ஆகியவற்றை அனுமதிக்கும். இதில் பிரத்யேக டெலிஃபோட்டோ கேமரா இல்லை. 2வது பின்புற கேமரா 8mp அல்ட்ராவைடு ஆகும். முன்புறத்தில், விவோவின் தனித்துவமான ஐ ஆட்டோஃபோகஸ் (Eye Autofocus) தொழில்நுட்பத்துடன் 50mp செல்ஃபி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
நிறங்கள் மற்றும் உழைப்புத் திறன்: விவோ V60e Noble Gold மற்றும் Elite Purple ஆகிய 2 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். இந்த ஃபோன் "உயர்தர" நீடித்த உழைப்புத் திறனுக்காக IP68 மற்றும் IP69 தூசி மற்றும் நீர் புகாத சான்றிதழ்களுடன், "முழு உடல் வீழ்ச்சி பாதுகாப்பு" (full body drop protection) அம்சத்தையும் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
V60e ஆனது V50e-ன் அடுத்த தலைமுறை ஆகும். V50e தற்போது விவோ இந்தியா இணையதளத்தில் ரூ.26,999 (8GB/128GB) என பட்டியலிடப்பட்டு உள்ளது. V60e, உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமரா மற்றும் பெரிய பேட்டரியுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகத் தெரிகிறது.
V60e-ன் வெளியீட்டிற்குப் பிறகு, இந்த மாதத்தின் மற்ற 2 பெரிய அறிவிப்புகள்: விவோவின் ஃபிளாக்ஷிப் X300 சீரிஸ் அக்டோபர் 13 அன்று சீனாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தொடர்ந்து, விவோ தனது Origin OS இயங்குதளத்தை இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளுக்காக அக்டோபர் 15 அன்று அறிவிக்க உள்ளது. இந்த அதிரடி வெளியீடுகளுடன் விவோவின் அக்டோபர் மாதம் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.