/indian-express-tamil/media/media_files/2025/06/05/s4nxUpARCN2Gcfd4JHMr.jpg)
ஜூன் 12 வானில் நடக்கும் அதிசயம்... 'ஸ்ட்ராபெரி மூன்' பார்க்க ரெடியா!
'ஸ்ட்ராபெரி மூன்' என்று சொன்னால், நிலவு ஸ்ட்ராபெரி சைஸில் இருக்கும் என்று எண்ண வேண்டாம். இது ஒரு வகையான முழு நிலவாகும். அதேபோல, ஸ்ட்ராபெரி நிறத்தில் இருக்கும் என்றும் நினைக்க வேண்டாம். தங்க நிறத்தில் இந்த நிலவு இருக்கும். வசந்த காலத்தின் கடைசி நிலவாக பார்க்கப்படுகிறது. இந்த பௌர்ணமி நாளில்தான் அமெரிக்காவில் 'ஸ்ட்ராபெரி' பழங்கள் விளைய தொடங்கும் என்பதால், அமெரிக்க பழங்குடியினரால் இந்த பௌர்ணமிக்கு ஸ்ட்ராபெரி மூன் என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. பல நாடுகளில், இந்த ஜூன் மலர் நிலவுக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன. ஐரோப்பாவில், இந்த நிலவு ரோஸ் மூன் என்று அழைக்கப்படுகிறது. அனிஷினாபே மக்கள், பூக்கும் பருவத்தைக் குறிக்க இதை பூக்கும் மூன் (Blooming Moon) என்று அழைக்கிறார்கள், அதே நேரத்தில் செரோகி மக்கள் இதை பச்சை சோள மூன் (Green Corn Moon) என்று குறிப்பிடுகிறார்கள்.
ஒப்பீட்டளவில் இந்த பௌர்ணமியின்போது சூரியனிலிருந்து பூமி மிக நீண்ட தூரத்தில் இருக்கும். சூரியனை பூமி சுற்றும் பாதை நீள்வட்டம் என்பதால், குறிப்பிட்ட சில நாட்களில் சூரியனுக்கு அருகிலும், சில நாட்களில் சூரியனுக்கு தூரத்திலும் பூமி இருக்கும். இந்த சமயத்தில் பூமி தூரமாக இருப்பதால், நிலவின் தொலைவும் சூரியனிலிருந்து தூரமாக இருக்கும். "ஸ்ட்ராபெரி மூன்" காலத்தில், சந்திரன் பூமிக்கு மிக அருகில் வருவதால் வழக்கத்தைவிட பெரிய அளவில் தெரியும்.
'ஸ்ட்ராபெரி மூன்' 11ம் தேதிதான் உதிக்கும் என்று சொல்லப்பட்டாலும், தமிழ்நாட்டில் ஜூன் 10-ம் தேதி இரவு முதலே இதனை பார்க்க முடியும். சென்னையில் இரவு 7.30 முதல் இதனை பார்க்கலாம். இந்த நிலவின் மேல் வலது பக்கத்தில் ஆன்டரஸ் நட்சத்திரம் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும். வானியல் அதிசயங்களில் இந்த 'ஸ்ட்ராபெரி மூன்' முக்கியமானதாகும். எனவே காணத் தவறாதீர்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.