மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நாடு முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஷேட் பேக் அப் வசதியில் புதிய விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது. அதன்படி, கூகுள் ட்ரைவ்-ல் இனி இலவசமாக வாட்ஸ்அப் ஷேட் பேக் அப் செய்ய முடியாது. ட்ரைவில் வழங்கப்படும் 15ஜிபி இலவச ஸ்டோரேஜ் உடன் இனி இந்த பேக் அப்-ம் கணக்கிடப்படும் என நிறுவனம் அண்மையில் தெரிவித்தது.
அந்த வகையில் வாட்ஸ்அப் பேக் கப் அளவைக் குறைக்க இந்த 3 சிம்பிள் டிப்ஸ் பின்பற்றலாம். இது உங்கள் பேக் அப் ஸ்டோரேஜை கட்டணம் இல்லாமல் பயன்படுத்த உதவும்.
Disable auto media download
முதலில் ஆட்டோ மீடியா டவுன்லோடு ஆப்ஷனை Disable செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற மல்டிமீடியாக்கள் வீடியோ, போட்டோ டவுன்லோடு செய்யப்படாது. குறிப்பாக இது குரூப் ஷேட் பக்கத்தில் வரும் "குட்மார்னிங்" மற்றும் "குட் ஈவினிங்" படங்களை auto டவுன்லோடு செய்து ஸ்டோரேஜ் நிரப்புவதை தவிர்க்கும். இந்த படங்கள் சிறியதாக இருந்தாலும், தொடர்ந்து செய்து வர இது அதிக ஸ்டோரேஜை எடுக்கும்.
Do not include videos in the chat backup
வாட்ஸ்அப் பேக் அப்-ல் எப்போதும் வீடியோக்கள் அதிக ஸ்டோரேஜை எடுக்கும். எனவே ஷேட் பேக் அப் செட்டிங்ஸில் “include videos” ஆப்ஷனை Disable செய்து வைக்க வேண்டும். இது ஸ்டோரேஜ் நிரப்புவதில் இருந்து பெருமளவு தவிர்க்கும்.
Turn on disappearing messages
குரூப் அல்லது தனி நபருக்கு disappearing messages ஆப்ஷன் எனெபிள் செய்வது குறிப்பிட்ட நேரத்தில் வாட்ஸ்அப் அந்த ஷேட் டெலிட் ஆகிவிடும். இது உங்கள் ஷேட் பேக்அப்பை குறைக்க உதவும்.
பொதுவாக கூகுள் ட்ரைவ் வாட்ஸ்அப் பேக் அப், போட்டோ, வீடியோ என அனைத்தையும் பேக் அப் செய்ய ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு 15ஜிபி ஸ்டோரேஜ் இலவமாக வழங்குகிறது. இது முடிவடையும் போது மாதம் அல்லது வருடாந்திர கட்டணம் செலுத்தி கூடுதல் கூடுதல் ஸ்டோரேஜ் பெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“