Advertisment

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கலா… இந்த 3 ட்ரிக் ட்ரை பண்ணுங்க

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் சிக்கல் ஏற்படுவது பொதுவானது தான். ஆனால், அதனை இந்த 3 ட்ரிக் மூலம் ஈஸியா கிளியர் செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஃபோன் ஸ்டோரேஜ் பிரச்னையா? போட்டோ எடுக்க முடியலையா? இதை செய்து பாருங்க!

ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை பராமரிப்பது மிகப்பெரிய பிரச்சினையாகும். ஏரளாமான செயலிகள், ஹை ரெசொலூஷன் போட்டோஸ், வீடியோஸ், பைல்ஸ் என ஸ்டோரேஜ் வெகு சீக்கிரமாக நிறைந்து, ஸ்டோரேஜ் புல் என்கிற நோட்டிபிகேஷன் தோன்றும். இதன் காரணமாக, தற்போது 128ஜிபி, 256 ஜிபி ஸ்மார்ட்போன்கள் வாங்கிடவே ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisment

ஸ்மார்ட்போனில் சில டிப்ஸ் மூலம் ஸ்டோரேஜ் சிக்கலை தடுத்திட முடியும். அதனை இச்செய்தி தொகுப்பில் காணலாம்.

முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் நீண்ட நாள்களாக பயன்படுத்தாமல் இருக்கும் செயலிகளை நீக்குங்கள். அடுத்ததாக, தவறுதலாக மொபைலில் கேப்சர் செய்யப்பட்ட போட்டோஸ், வீடியோஸ் டெலிட் செய்யப்படாமல் விட வாய்ப்பு அதிகம். அதனை அவ்வப்போது செக் செய்து, டெலிட் செய்துவிடுங்கள். இந்த ஸ்டெப்ஸ் முடித்தவர்கள், கீழே உள்ள மூன்று வழிகளை முயற்சி செய்து பாருங்கள்

  1. Clear your Smartphone cache

ஸ்மார்ட்போனில் cache-க்கள் அதிகப்படியான ஸ்டோரேஜ் ஸ்பேஸை பிடித்திருக்கும். ஒவ்வொரு செயலியும், குறிப்பிட்ட டேட்டாவை தற்காலிகமாக ஸ்டோர் செய்து வைத்திருக்கும். அதனை டெலிட் செய்திட, முதலில் Settings செல்ல வேண்டும். அதில், Find the apps ஆப்ஷன் கிளிக் செய்யுங்கள். திரையில் தோன்றும் செயலி பெயர்களை கிளிக் செய்தால், அது மொபைலில் எவ்வளவு இடத்தை பிடித்துவைத்திருக்கிறது என்பதை காண்பிக்கும் அதிலே, இறுதியாக Clear the cache என்கிற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து டெலிட் செய்துவிடுங்கள். குறிப்பு: அங்கு user data என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கட்டாயம் டெலிட் செய்யக்கூடாது.

  1. Shift photos, videos to cloud or delete apps

நீங்கள் ஆண்ட்ராய்டு யூசர் என்றால் கூகுள் கிளவுடு ஆப்ஷனும், ஐபோன் யூசர்களுக்கு ஆப்பிள் கிளவுடு வசதிகள் இருக்கும். மொபைலில் உள்ள போட்டோ, வீடியோ, பைல்களை கிளவுடில் மாற்றிக்கொள்ளாம். இது, செல்போனின் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் குறைத்திட உதவியாக இருக்கும். குறிப்பு கிளவுட் கணக்கின் லாகின் தகவல்களை மறந்துவிடாதிர்கள். ஏனெனில், மொபைல் மாற்றும் போது, லாகின் தகவல் தெரியாவிட்டால் டேட்டா இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும்.

3.Take help of whatsapp storage manager

ஸ்மார்ட்போனில் ஸ்டோரேஜ் பிரச்சினைக்கு, வாட்ஸ்அப் முக்கிய காரணமாகும். ஏனெனில், வாட்ஸ்அப்பில் வரும் போட்டோ, வீடியோஸ், பைல்ஸ் அனைத்தும் செல்போனில் ஸ்டோர் ஆகியிருக்கும். நீங்கள் சாட் அல்லது குரூப் மெசேஜ்களை டெலிட் செய்தாலும், சாட் பைல்ஸ் வாட்ஸ்அப்பில் ஸ்டோர் ஆகியிருக்கும்.

இந்த பிரச்னை தீர்த்திட, வாட்ஸ்அப் செயலி ஓபன் செய்து Settingsஇல் storage and data ஆப்ஷனில் Manage storage கிளிக் செய்ய வேண்டும்.

அதில், 5 எம்.பிக்கும் அதிகமான பைல்களை கண்டறிந்து, அதில் தேவையில்லாத பைல்களை டெலிட் செய்துகொள்ளுங்கள். கூடுதல் தகவல்களுக்கு குறைவான இடத்தை கொண்ட பைல்களையும் டெலிட் செய்யலாம்.

எல்லாவற்றுக்கும் மேலாக, மொபைலில் மெமிரி கார்டு போட்டிருந்தால், ஸ்டோரேஜ் பிரச்சினையை எளிதாக தீர்த்துவிடலாம். ஸ்டோரேஜ் அதிகமாகும் பட்சத்தில், மொபைல் ஹேங் ஆகுவதை பல பயனர்கள் எதிர்கொண்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment