scorecardresearch

Whatsapp Tricks:மொபைல் நம்பர் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

மற்றவர்களுடைய மொபைல் நம்பர் போனில் சேவ் செய்யாமல் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியும். 3 வழிகளில் நாம் இவ்வாறு மெசேஜ் அனுப்ப முடியும். அது பற்றி இங்கு பார்ப்போம்.

Whatsapp Tricks:மொபைல் நம்பர் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்பலாம்.. எப்படி தெரியுமா?

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பல மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது. வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்புவது, போன் பேசுவது, வீடியா கால், பணம் அனுப்புவது என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது. இருப்பினும் போன் contact-இல் மற்றவர்களுடைய நம்பர் சேவ் (save) செய்யவில்லை என்றால் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்ப முடியாது. ஆனால் சில வழிகளைப் பயன்படுத்தி போனில் நம்பர் சேவ் செய்யாமல் மெசேஜ் அனுப்ப முடியும். யாரேனும் தெரியாத நபர்களுக்கு, உங்கள் நண்பர்கள் அல்லாதோருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமென்றால் இந்த முறையை பயன்படுத்தலாம். பலரும் இந்த முறையை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

வெப் பிரவுசர் மூலம் அனுப்புவது

  1. முதலில் உங்கள் போனில் வெப் பிரவுசர் செல்ல வேண்டும்.
  2. பிறகு, “http://wa.me/91xxxxxxxxxx” என்ற லிங்க் டைப் செய்து, என்டர் கொடுக்க வேண்டும். ‘XXXXX’ என்ற இடத்தில் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களுடைய 10 இலக்க மொபைல் நம்பர், நாட்டின் கோடு நம்பர் பதிவிட்டு டைப் செய்ய வேண்டும். (எ.கா) “https://wa.me/991125387”.
  3. நம்பர் டைப் செய்த பிறகு, என்டர் கொடுத்து லிங்க் ஆப்பன் செய்ய வேண்டும்.
  4. இப்போது வாட்ஸ்அப் ஸ்கீரின் பக்கம் சென்று, பச்சை நிற பட்டன் “Continue Chat” கொடுக்க வேண்டும்.
  5. நம்பர் பதிவிட்ட வாட்ஸ்அப் சேட் ஆப்பன் ஆகி விடும். இப்போது அந்த நம்பருக்கு நீங்கள் மெசேஜ் அனுப்பலாம்.

போனில் நம்பர் சேவ் செய்யாமல் Truecaller மூலம் மெசேஜ் அனுப்புவது

  1. Truecaller ஆப் ஆப்பன் செய்ய வேண்டும்.
  2. எந்த நபருக்கு மெசேஜ் செய்ய வேண்டுமா அந்த நபரின் மொபைல் எண்யை சர்ச் பாரில் (search bar) டைப் செய்ய வேண்டும்.
  3. அந்த நபரின் Truecaller profile ஆப்பன் ஆகும்.
  4. அந்த பக்கத்திலேயே கீழே வந்து வாட்ஸ்அப் பட்டன் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
    5.இப்போது வாட்ஸ்அப் சேட் ஆப்பன் ஆகிவிடும்.
  5. நம்பர் சேவ் செய்யாமலேயே அந்த நபருக்கு இப்போது மெசேஜ் அனுப்பலாம்.

Siri (Shortcut) மூலம் வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பலாம் (ஐபோன் பயனர்களுக்கு மட்டும்)

  1. உங்கள் ஐபோனில் ஆப்பிள் Shortcuts ஆப் செல்ல வேண்டும்.
  2. “Add shortcut” பட்டன் கொடுக்க வேண்டும்.
  3. இப்போது Non-Contact shortcut-யிற்கு வாட்ஸ்அப் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
  4. .shortcut இன்ஸ்டால் செய்யப்பட்ட உடன், அதை ரன் செய்ய வேண்டும்.
  5. பின், “Choose recipient” என வரும். அதில் யாருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களது நம்பர் நாட்டின் கோடு எண்ணுடன் டைப் செய்ய வேண்டும். (எ.கா) (+91- for Indian number)
  6. நம்பர் டைப் செய்து கிளிக் செய்தவுடன் சம்பந்தப்பட்ட நம்பருக்கு வாட்ஸ்அப் சாட் ஆப்பனாகி விடும்.

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: 3 tricks to send whatsapp messages without saving phone number