scorecardresearch

போன் நம்பர் Save செய்ய தேவையில்லை; வாட்ஸ்அப்பில் சேட் செய்யலாம்.. 3 ஈஸி வழிகள் இங்கே!

வாட்ஸ்அப்பில் மற்றவர்களின் போன் நம்பர் (Save) பதிவு செய்யாமல் அவர்களிடத்தில் சேட் செய்யலாம். அது குறித்து இங்கு பார்ப்போம்.

போன் நம்பர் Save செய்ய தேவையில்லை; வாட்ஸ்அப்பில் சேட் செய்யலாம்.. 3 ஈஸி வழிகள் இங்கே!

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பல்வேறு பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப் ஆகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் வாட்ஸ்அப்பில் மற்றவருடன் பேச வேண்டும் என்றால் அவர்களின் போன் நம்பரை நம் போனில் பதிவு செய்து கொண்டு தான் பேச முடியும். ஆனால் எல்லா நேரங்களிலும் இவ்வாறு செய்ய முடியாது. பாதுகாப்பு பிரச்சனைகளை ஏற்படலாம். உதாரணமாக உங்கள் உறவினர், நண்பர்கள் அல்லாத ஒருவருக்கு மெசேஜ் செய்ய வேண்டும் என்றால் நம்பர் பதிவு செய்து தான் வாட்ஸ்அப் அனுப்ப முடியும். இது எந்தளவிற்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறமுடியாது. அந்த வகையில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் மற்றவர்களின் போன் நம்பர் பதிவு செய்யாமல் 3 வழிகளில் மெசேஜ் அனுப்பலாம். அது குறித்து இங்கு பார்ப்போம்.

வெப் பிரௌசர் மூலமாக அனுப்புவது

வெப் பிரௌசர் மூலமாக நம்பர் பதிவு செய்யாமல் மற்றவருக்கு மெசேஜ் அனுப்பலாம். அதற்கு முதலில் இன்டர்நெட் வெப் பிரௌசர் சென்று அங்கு wa.me/ என டைப் செய்து பின்னர் அதில் மற்றவரின் வாட்ஸ்அப் நம்பரை பதிவிடவும். நம்பருக்கு முன் country code பயன்படுத்தவும்.

இப்போது ‘Continue to Chat’ என்ற ஆப்ஷன் திரையில் வரும். அதை கிளிக் செய்யவும். வாட்ஸ்அப் விண்டோ வந்தவுடன் அதில் சேட் செய்யலாம்.

வாட்ஸ்அப் ‘Message Yourself’ அம்சம்

வாட்ஸ்அப் ‘Message Yourself’ அம்சம் மூலம் நம்பர் பதிவு செய்யாமல் மெசேஜ் அனுப்பலாம். அதற்கு முதலில் யாருக்கு செசேஜ் அனுப்ப வேண்டுமோ அந்த நம்பரை contacts இருந்து காபி செய்து கொள்ளவும். இப்போது வாட்ஸ்அப் பக்கம் வந்து சேட் செக்ஷனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மெசேஜ் ஐகானை கிளிக் செய்யவும். இப்போது message yourself என்ற ஆப்ஷன் வரும். அதில் நம்பரை பேஸ்ட் செய்து சேட் செய்யலாம்.

மூன்றாம் தரப்பு செயலிகள் (third-party apps)

மூன்றாம் தரப்பு செயலி பயன்படுத்தி நம்பர் பதிவு செய்யாமல் மெசேஜ் அனுப்பலாம். அதற்கு கூகுள் பிளே ஸ்டோர் சென்று ‘Click to Chat’ என்ற செயலியை டவுன்லோடு செய்யவும். அந்த செயலியை ஓபன் செய்து country prefix code-உடன் போன் நம்பர் பதிவிடவும். country code தெரியவில்லை என்றாலும் அங்கு ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும் அதை தேர்வு செய்து enter கொடுத்து பயன்படுத்தலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: 3 ways you can chat with people on whatsapp without adding them to your contacts

Best of Express