3D பிரிண்டிங் மூலம் மனித உறுப்புகள்: மருத்துவ உலகில் புதிய அத்தியாயம்!

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனித உறுப்புகளை உருவாக்கும் முயற்சியில் புரட்சிகரமான முன்னேற்றங்களை அடைந்து உள்ளது. இது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் உள்ள பல சவால்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும்.

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனித உறுப்புகளை உருவாக்கும் முயற்சியில் புரட்சிகரமான முன்னேற்றங்களை அடைந்து உள்ளது. இது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் உள்ள பல சவால்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும்.

author-image
Meenakshi Sundaram S
New Update
3D Printing Human Organs (1)

3D பிரிண்டிங் மூலம் மனித உறுப்புகள்: மருத்துவ உலகில் புதிய அத்தியாயம்!

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, மனித உறுப்புகளை உருவாக்கும் முயற்சியில் புரட்சிகரமான முன்னேற்றங்களை அடைந்து உள்ளது. இது, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் உள்ள பல சவால்களுக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் என மருத்துவ வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisment

உறுப்பு மாற்று சிகிச்சைக்குக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. தானமாக உறுப்புகள் கிடைப்பதில் உள்ள பற்றாக்குறை, நீண்ட காத்திருப்பு மற்றும் உறுப்பு பொருத்தம் தொடர்பான சிக்கல்கள் ஆகியவை பல உயிர்களைக் காவு வாங்குகின்றன. இந்த இக்கட்டான சூழ்நிலையில், 3D பிரிண்டிங் கலங்கரை விளக்கமாக உருவெடுத்துள்ளது. தற்போது, விஞ்ஞானிகள் சிறுநீரகம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளின் சிறிய அளவிலான மாதிரிகளை 3D பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக அச்சிட்டுள்ளனர். இந்த மாதிரிகள், சிக்கலான உயிரியல் அமைப்புகளைப் புரிந்துகொள்ளவும், பெரிய மற்றும் முழுமையாகச் செயல்படும் உறுப்புகளை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளைத் துரிதப்படுத்தவும் உதவுகின்றன.

எப்படி இது வேலை செய்கிறது?

3D தொழில்நுட்பத்தில், நோயாளியின் சொந்த செல்கள் சேகரிக்கப்பட்டு, சிறப்பு "பயோ-இன்க்" ஆக மாற்றப்படுகின்றன. இந்த பயோ-இன்க், 3D பிரிண்டரைப் பயன்படுத்தி, உறுப்பின் சரியான வடிவத்திலும், அடுக்குகளிலும் அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட பிறகு, இந்த அமைப்பு ஆய்வக சூழலில் வளர்க்கப்பட்டு, முழுமையான செயல்படும் உறுப்பாக மாறுகிறது. நோயாளியின் சொந்த செல்களைப் பயன்படுத்துவதால், உறுப்பு நிராகரிப்பு (organ rejection) அபாயம் கணிசமாகக் குறைகிறது.

முழு அளவிலான, செயல்படும் மனித உறுப்புகளை 3D பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்க முடிந்தால், அது மருத்துவ உலகில் எண்ணற்ற கதவுகளைத் திறக்கும். உறுப்பு தானத்திற்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு உடனடியாக உயிர் காக்கும் உறுப்புகள் கிடைக்கும். ஒவ்வொரு நோயாளியின் உடல் அமைப்புக்கு ஏற்ப துல்லியமான உறுப்புகளை உருவாக்க முடியும். நோயாளியின் சொந்த செல்களைப் பயன்படுத்துவதால், உடல் புதிய உறுப்பை நிராகரிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. புதிய மருந்துகளைச் சோதிக்கவும், மருத்துவ மாணவர்களுக்கு அறுவை சிகிச்சை முறைகளைக் கற்பிக்கவும் இந்த 3D அச்சிடப்பட்ட உறுப்புகள் பெரிதும் உதவும்.

Advertisment
Advertisements

3D பிரிண்டிங் தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம், மனித இனத்திற்கு புதிய மருத்துவப் புரட்சியைக் கொண்டுவரும் என்பதில் சந்தேகமில்லை. வரும் ஆண்டுகளில், இந்தத் தொழில்நுட்பம் மருத்துவச் சிகிச்சைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: