ஊழியர்களுக்கு அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் EPF(Employee Provident Fund) எனப்படும் தொழிலாளர் வைப்பு நிதியை வழங்கும். பொதுவாக இது மாதம் தோறும் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவர்களது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. மத்திய அரசு இதற்கு வட்டியும் வழங்குகிறது. ஊழியர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு இந்த தொகையை எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், ஆன்லைனில் இ.பி.எப்.ஓ இருப்புத் தொகை எவ்வளவு உள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். 4 வழிகளில் இதை அறியலாம்.
Umang ஆப்
Umang (உமாங்) செயலியை ஊழியர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் எளிதாக பயன்படுத்தலாம். உங்கள் ஃபோன் எண்ணை பதிவிட்டு லாக்கின் செய்து பிற விவரங்களை உள்ளிட்டு பயன்படுத்தலாம்.
EPFO portal
EPFO-ன் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமும் தெரிந்து கொள்ளலாம். employees என்பதை கொடுத்து “Member Passbook” கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் UAN மற்றும் பாஸ்வேர்ட் பதிவிடவும். இப்போது PF passbook பயன்படுத்த முடியும். இதில் பி.எப் தொகை விவரம் உள்ளிட்டவைகள் காண்பிக்கப்படும். பேலன்ஸ் - இருப்புத் தொகை குறித்த விவரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
மிஸ்டு கால்
நீங்கள் UAN தளத்தில் பதிவு செய்திருந்தால், உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் தகவலைப் பெறலாம். உங்கள் வங்கிக் கணக்குத் தகவல், ஆதார் மற்றும் பான் எண் ஆகியவை உங்கள் UAN இல் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எஸ்.எம்.எஸ்
எஸ்.எம்.எஸ் மூலமும் பி.ஃஎப் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம். இதற்கு UAN EPFOHO ENG என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். இதில் கடைசியாக உள்ள ENG என்பது மொழி தேர்வை குறிக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“