ஆகஸ்ட் 27 மற்றும் செப்டம்பர் 1-க்கு இடையில் 5 சிறுகோள்கள் பூமியை கடந்து உள்ளன. இவை பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாது எனக் கூறப்படும் நிலையிலும் நாசா இவற்றை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சிறுகோள் 2020 RL: 2020 RL என பெயரிடப்பட்ட முதல் சிறுகோள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் 46.8 லட்சம் கிமீ தொலைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 110 அடி கொண்ட சிறுகோள் நவீன கால விமானம் அளவு கொண்டது.
சிறுகோள் 2021 RA10: 2021 RA10 சிறுகோள் 92 அடி மற்றும் ஒரு விமானம் போன்று பெரியது. ஆகஸ்ட் 28 அன்று இந்த சிறுகோள் பூமியை நெருங்குகிறது. 26.1 லட்சம் கிமீ தொலைவில் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிலான சிறுகோள்கள் பொதுவானவை மற்றும் எதிர்கால அபாயங்களை மதிப்பிடுவதற்காக வானியலாளர்கள் தங்கள் சுற்றுப்பாதைகளை கண்காணிக்கின்றனர்.
சிறுகோள் 2012 SX49: இந்த சிறுகோள் தோராயமாக ஒரு வீட்டின் அளவு மற்றும் 64-அடி விட்டம் கொண்டது. 2012 SX49 ஆகஸ்டு 29 அன்று 42.9 லட்சம் கிமீ தொலைவில் பூமிக்கு மிக அருகில் வரும். இப்போது சிறுகோள்களை விஞ்ஞானிகள் கவனிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது மீண்டும் அச்சுறுத்தலை கொண்டுமா என்று ஆய்வு செய்கின்றனர்.
சிறுகோள் 2016 RJ20: இது 210 அடி அளவு மற்றும் ஆகஸ்ட் 30 அன்று பூமிக்கு 69.9 லட்சம் கிமீ தொலைவில் வந்து செல்லும். ஏறக்குறைய ஒரு விமானத்தின் அளவுள்ள இந்த சிறுகோளால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.
சிறுகோள் 2021 JT: இந்த நேரத்தில் பூமியை நெருங்கும் மிகச்சிறிய சிறுகோள் இதுவாக இருக்கலாம். 2021 JT சிறுகோள் 63.6 லட்சம் கிமீ பாதுகாப்பான தூரத்தில் கடந்து செல்லும். சிறுகோள் அளவு சிறிதாக இருந்தாலும் விஞ்ஞானிகள் இதையும் கண்காணிக்கிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.