/indian-express-tamil/media/media_files/2025/06/23/money-smarter-2025-06-23-12-51-12.jpg)
எவ்வளவு பணம் வந்தாலும் கையில நிக்க மாட்டேங்குதா? செலவுகளைக் கட்டுப்படுத்த உதவும் 5 சிறந்த ஆஃப்!
Top budget planner apps 2025: இன்றைய டிஜிட்டல் உலகில் செலவுகளைக் கண்காணிப்பது மிக கடினமாக இருக்கலாம். டிஜிட்டல் வாலட், கிரெடிட் மற்றும் டெபிட் மற்றும் ரொக்கப்பணம் (cash) எனப் பல வழிகளில் செலவு செய்வதால், நிதி நிர்வாகம் என்பம் ஒரு கனவாக மாறக்கூடும். உங்கள் செலவுகளைத் தானாகவே கண்காணித்து, பணத்தைச் சேமிக்க உதவும் பல மொபைல் செயலிகள் உள்ளன. பணம் எப்படி, எங்கே செலவாகிறது என்பதைக் கண்டறிய சிரமப்படுபவர் நீங்கள் என்றால், இந்த 5 இலவச செலவு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை ஆஃப் செயலிகளை முயற்சி செய்யலாம். இந்த செயலிகள் மூலம் நிதி நிலையை எளிதாகக் கண்காணித்து, ஸ்மார்ட்டாக பணத்தை நிர்வகிக்கலாம்.
1. Axio: Income, Expense and Budget
10 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன், Axio செயலி எப்போதும் மிகவும் பிரபலமான இலவச செலவு கண்காணிப்பு மற்றும் மேலாண்மை செயலிகளில் ஒன்றாகும். இந்தச் செயலி உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து வங்கிக் கணக்குகள் மற்றும் கார்டுகளைக் கண்டறிந்து சேர்க்கிறது. மேலும், SMS மூலம் பரிவர்த்தனைத் தரவைப் பெற்று, உங்கள் செலவுகளைத் தானாகவே கண்காணிக்கிறது. இது பயன்படுத்த எளிதாக இருக்கும். நீங்கள் மாதாந்திர பட்ஜெட்டை அமைக்க இது உதவும், இதன் மூலம் நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களுக்காக குறிப்பிட்ட தொகையை எளிதாகச் சேமிக்க முடியும்.
பெரும்பாலான செலவு கண்காணிப்பு செயலிகளைப் போலவே, கிரெடிட் கார்டு, மின்சாரம் மற்றும் பிற பில்களைச் செலுத்த மாதாந்திர நினைவூட்டல்களையும் இந்த ஆஃப் வழங்கும். உங்களுக்கு பணம் பற்றாக்குறையாக இருந்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு Axio pay-later விருப்பத்தையும், தனிநபர் கடன் (personal credit) விருப்பங்களையும் வழங்குகிறது.
2. Wallet: Budget and Money Manager
Wallet: Budget and Money Manager செயலி உங்களுக்கு சரியானதாக இருக்கலாம். Axio-வை (ஆக்சியோ) போலவே, இந்த ஆல்-இன்-ஒன் பட்ஜெட் திட்டமிடுதல் மற்றும் செலவு கண்காணிப்பு செயலியும் உங்கள் வங்கிக் கணக்கை இணைக்க அனுமதிக்கிறது. இதன் மூலம் செலவுத் தரவை தானாக சேர்க்க முடியும். உங்கள் செலவுகள் எங்கே செல்கின்றன என்பதைப் பற்றிய விரிவான அறிக்கையையும், பணப்புழக்கத்தையும் (cash flow) வழங்குகிறது. பயனர்கள் தங்கள் பங்கு முதலீடுகளைக் (stock investments) கண்காணிக்கவும், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிய தங்கள் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் வாய்ப்பு உள்ளது. சில மேம்பட்ட அம்சங்களில் தானியங்கி கிளவுட் ஒத்திசைவு (automatic cloud sync), பரிவர்த்தனை இருப்பிட மேப்பிங் (transaction location mapping) மற்றும் கடன் மேலாண்மை (debt management) ஆகியவை அடங்கும்.
3. Money Manager Expense & Budget
உங்கள் செலவுகளை கடைசி பைசா வரை கண்காணிக்க விரும்பினால், RealByte Inc. உருவாக்கிய Money Manager Expense & Budget செயலியை பயன்படுத்தலாம். இந்தச் செலவு கண்காணிப்பு செயலி, பயனர்கள் தங்கள் பணம் எங்கு, எப்படி செலவாகிறது என்பதைக் கூர்மையாகக் கண்காணிக்க உதவும் பல அம்சங்களைக் கொண்டுள்ளது.
பெரும்பாலான செயலிகளைப் போலவே, தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அறிக்கைகளை வழங்குகிறது. மேலும், பட்ஜெட்டை எளிதாக்க உள்ளமைக்கப்பட்ட built-in asset manager கொண்டுள்ளது. இந்தச் செயலியின் மிகவும் குறைவாக மதிப்பிடப்படும் அம்சங்களில் ஒன்று, அதன் double-entry bookkeeping accounting system ஆகும். நீங்கள் தரவை உள்ளீடு செய்தவுடன் உங்கள் வருமானம் மற்றும் செலவுகளைப் பதிவு செய்கிறது.
நீங்கள் துணைப் பிரிவுகளை (sub-categories) இயக்க அல்லது அணைக்கலாம், தொடக்கத் தேதியை மாற்றலாம், உங்கள் பரிவர்த்தனைகளை backup மற்றும் restore செய்யலாம். மேலும், அடிக்கடி நிகழும் பரிவர்த்தனைகளை bookmark செய்யலாம். இந்த இலவச ஆப்பில் சில குறைபாடுகள் என்னவென்றால், விளம்பர ஆதரவுடன் (ad-supported) வருகிறது. மேலும் நீங்கள் சேர்க்கக்கூடிய சொத்துக்களின் (assets) எண்ணிக்கை 15 ஆகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
4. AndroMoney (Expense Track)
Android இயங்குதளத்தில் கிடைக்கும் மற்றொரு பிரபலமான செலவு கண்காணிப்பு செயலி AndroMoney ஆகும். இந்தச் செயலி ஒரு மிகக் குறைந்த அம்சங்களைக் கொண்ட minimalistic கொண்டுள்ளது. மேலும், ஒரு பட்டன் அழுத்துவதன் மூலம் உங்கள் அனைத்து செலவுகளையும் விரைவாகச் சேர்க்க உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் தனிப்பயன் பட்ஜெட்களை அமைக்கலாம், தரவை மற்ற சாதனங்களுடன் ஒத்திசைக்கலாம் (sync), கிளவுட்டில் காப்புப் பிரதி எடுக்கலாம் (backup) மற்றும் கடவுச்சொல்லை (password) அமைக்கலாம். இந்தச் செயலியில் எளிதாக அணுகக்கூடிய மெனுவும் உள்ளது. உங்கள் செலவுகளை வகைப்படுத்தவும், பட்ஜெட்டைக் கண்காணிக்கவும், pie chart, trend chart அல்லது bar chart வடிவில் ஸ்டேட்மெண்ட் பெறவும் உதவுகிறது.AndroMoney ஆனது iOS மற்றும் இணையத்திலும் (web) கிடைக்கிறது.
5. Meow Money Manager – Cute Cat
உங்கள் வங்கிக் கணக்குகளை அணுகும் செலவு கண்காணிப்பு செயலிகளைப் பயன்படுத்த விரும்பவில்லையா? அப்படியானால், நிதி நிர்வாகத்தை வேடிக்கையாக மாற்றும், கண்ணைக் கவரும் செலவு கண்காணிப்பு செயலியான Meow Money Manager-ஐ முயற்சி செய்யுங்கள். இந்தச் செயலி உணவு, பில்கள், கார், பொழுதுபோக்கு மற்றும் பல போன்ற பல்வேறு செலவுகளைப் பதிவு செய்ய 200-க்கும் மேற்பட்ட அழகான ஐகான்களுடன் வருகிறது. உங்கள் நிதி நடவடிக்கைகளின் தினசரி, வாராந்திர, மாதாந்திர (அ) ஆண்டுவாரியான உடனடி புள்ளிவிவரங்களைப் பெறலாம். மேலும், உங்களுக்கென சொந்தப் பிரிவுகளைத் தேர்வுசெய்யும் விருப்பம் மற்றும் உங்கள் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு பிரத்யேக விருப்பமும் உள்ளது. உங்கள் அனைத்து பதிவுகளையும் கிளவுட் ஸ்டோரேஜில் (cloud storage) காப்புப் பிரதி எடுக்கலாம். மேலும், பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் (biometric authentication) பயன்படுத்தி பூட்டவும் முடியும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.