Advertisment

வாட்ஸ்அப் பயனர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 புதிய வசதிகள் இங்கே

WhatsApp new features: பிரைவேட் ஷேட், HD போட்டோஸ் உள்பட வாட்ஸ்அப்-ல் உள்ள புதிய வசதிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp

WhatsApp

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட மெசேஜிங் செயலியாகும். ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது.

பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அறிமுகம் செய்த 5 புதிய வசதிகள் குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

HD போட்டோஸ்

போட்டோ குவாலிடிட்டி-யை உறுதி செய்ய வாட்ஸ்அப் High-definition (HD) போட்டோக்களை நேரடியாக அனுப்பும் ஆப்ஷன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் இரு போன்களிலும் அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் HD வீடியோக்களையும் அனுப்பும் வகையில் சோதனை செய்து வருகிறது.

Instant video messages

வாட்ஸ்அப்பில் சமீபத்தில் இன்ஸ்டண்ட் வீடியோ மெசேஜ்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்தது. ஒரு மெசேஜிக்கு நீங்கள் நேரடியாக வாட்ஸ்அப்பில் இருந்தே வீடியோ மெசேஜ்களை அனுப்பலாம். 1 நிமிட வீடியோவை அனுப்பலாம். இது மெட்டாவின் வாட்ஸ்அப்பிற்கு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது.

Mute unknown callers

வாட்ஸ்அப்பில் இருந்து unknown நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளால் சோர்வடைந்தீர்களா? இதற்காகவே பிரத்யேகமாக பயனரின் தனியுரிமையை மேம்படுத்த மெட்டாவுக்குச் சொந்தமான மெசேஜிங் தளம், தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை தானாகவே Mute செய்யும் ஆப்ஷனை கொண்டு வந்தது. இந்த ஆப்ஷனை எனேபிள் செய்தால் தெரியாத நபரிடமிருந்து வரும் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை தானாகவே Mute செய்யும்.

Edit messages

எடிட் மெசேஜ் அம்சம் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த ஒரு அம்சம் ஆகும். எழுத்துப் பிழையாக, தவறாக மெசேஜ் அனுப்பியிருந்தால் அதை டெலிட் செய்யாமல் அப்படியே எடிட் செய்து அனுப்பலாம். இதை மெசேஜ் அனுப்பி 15 நிமிடங்களுக்குள் செய்ய வேண்டும்.

Secure private chats

Chat Lock அம்சம் உங்கள் பிரைவசியை மேலும் மேம்படுத்துகிறது. Chat Lock அம்சம் மூலம் குறிப்பிட்ட நபரின் ஷேட்டை லாக் செய்து பயன்படுத்தலாம். Fingerprint, Password பயன்படுத்தி ஷேட்டை லாக் செய்து பயன்படுத்தலாம். இது உங்களுக்கு மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறத.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment