முகம், கைரேகை, கருவிழி ஆகியவற்றை ஸ்கேன் செய்து உங்களின் ஸ்மார்ட்போனை உபயோகிக்கும் முறை வந்து வெகு நாட்களாகிவிட்டது. ஆனால் என்ன, ஆரம்ப காலங்களில் அவையாவும் ஆப்பிள் போன்ற மிகப் பெரிய நிறுவனங்களில் உருவாகும் ஐபோன்களில் தான் வந்து கொண்டிருந்தது.
முதலில் கைரேகை ஸ்கேன் செய்து ஸ்மார்ட் போனினை உபயோகிக்கும் முறையினை ஆப்பிள் அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், அதனையே நிறைய மொபைல் தயாரிக்கும் நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்தின. ஃபேசியல் ஸ்கேனிங் முறை அறிமுகமான பின்பு ஃபிங்கர் பிரிண்ட் டெக்னாலஜி தொலைந்து போனது. வெகு சில போன்கள் ஃபிங்கர் பிரிண்ட் டெக்னாலஜியுடன் ஃபேசியல் ஸ்கேனிங் முறையினையும் அறிமுகப்படுத்தியது. ஆனால் அந்த ஸ்மார்ட் போன்களின் விலையெல்லாம் மிகவும் அதிகம். ஆனாலும் இன்று 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் ஃபேசியல் ஸ்கேனிங் சிஸ்டம் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றன.
உங்களின் தகவல்கள் மற்றும் டேட்டாக்களை பாதுகாப்பாக வைத்திருக்க இது போன்ற சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும் ஸ்மார்ட்போன்களை 10,000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்க விரும்பினால் உங்களுக்கான பட்டியல் இதோ....
ஸியோமி ரெட்மி நோட் 5 (Xiaomi Redmi Note 5)
10000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் போன்களில் இதுவும் ஒன்று. 5 மெகாபிக்சல் கேமராவுடன் கூடிய ஃபேசியல் ஸ்கேனிங் டெக்னாலஜியுடன் மார்க்கெட்டில் கிடைக்கின்றது. ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டிலும் இந்த ஸ்மார்ட் போன்கள் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. விலை 9,999 மட்டுமே.
ஸியோமி ரெட்மி ஒய் 2 (Xiaomi Redmi Y2)
ஸியோமி ரெட்மி எஸ் 2 போனின் ரீவெர்ஷன் மொபைல் போன் இது. கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் போனின் ஃப்ர்ண்ட் கேமரா 16 மெகாபிக்சல் ரெசல்யூசனைக் கொண்டிருக்கின்றது. சிறந்த செல்பி ஸ்மார்ட் போனின் விலை ரூ. 9,999ல் இருந்து தொடங்குகின்றது.
ஹானர் 7சி (Honor 7C)
மிக சமீபத்தில் இந்தியாவில் அறிமுகபப்டுத்தப்பட்ட ஸ்மார்ட் போன் இது. 8 மெகாபிக்சலுடன் கூடிய ஃபிரண்ட் கேமராவை கொண்டிருக்கும் இப்போனின் விலையும் 9,999 மட்டுமே. இந்த பட்ஜெட் போனின் சிறப்பம்சங்கள் அனைத்தையும் பார்க்கும் போது, இது ஸியோமி ரெட்மி நோட் 5க்கு இணையான சவாலான ஸ்மார்ட் போன் ஆகும்
ஓப்போ ரியல்மீ 1 (Oppo Realme 1)
ஸியோமி ரெட்மி போன்களுக்கான சரியான போட்டியாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் ஓப்போ ரியல்மீ போன். ஆர்ட்டிஃபீசியல் இண்டலிஜன்ஸுடன் இருக்கும் இந்த போனிலும் 8 மெகாபிக்சலுடன் கூடிய ஃபிரண்ட் கேமராவுடன் கூடிய ஃபேசியல் ஸ்கேனிங் டெக்னாலஜி இருக்கின்றது. இந்த போனின் ஆரம்ப விலை வெறும் ரூ. 8,990 மட்டுமே.
ஹானர் 7ஏ (Honor 7A)
8 மெகாபிக்சலுடன் கூடிய ஃபிரண்ட் கேமராவுடன் வரும் இந்த போனின் விலை 8,990 மட்டுமே. 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜுடன் இயங்கும் இப்போனில் செயல்படும் ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் இரட்டை ஃபேசியல் ஸ்கேனிங் முறையினை கொண்டு செயல்பாடுகின்றது.