/indian-express-tamil/media/media_files/2025/05/25/HjouTBDDYoy7mZgkphTd.jpg)
இந்திய காடுகளில் மட்டும் காணப்படும் 5 முக்கிய பூனை வகை உயிரினங்கள்; இதெல்லாம் தெரியுமா?
சிங்கம், புலி மற்றும் சிறுத்தை என 3 விலங்குகளும் வாழும் ஒரே நாடாக உலகிலேயே இந்தியாதான் உள்ளது. இந்த 3 மிருகங்களை தவிர, இந்திய காட்டுகளில் பூமா, ஜாகுவார், மேகப்புலி, பாலைவனப் பூனை உள்ளிட்ட ஏராளமான (மொத்தம் சுமார் 15) பெரிய காட்டு பூனை இன விலங்குகள் வசிக்கின்றன. இந்திய காடுகளில் காண வேண்டிய 5 முக்கிய பெரிய பூனை வகை கொண்ட விலங்குகள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க: 5 special big cats found only in India
1. வங்காளப் புலி (Royal Bengal Tiger)
இந்தியாவின் தேசிய விலங்கான வங்காளப் புலிகள், வெளிர் மஞ்சள் முதல் ஆரஞ்சு நிறம் கொண்ட தோலுடன் வெளிர் பழுப்பு முதல் கருப்பு நிறம் வரையிலான வரி கோடுகளை கொண்டிருக்கும். ஆண் புலியின் சராசரி எடை தோராயமாக 265 கிலோகிராம் ஆகும், அதே சமயம் பெண் புலிகளின் சராசரி எடை 140-165 கிலோகிராம் ஆகும். இந்த வரிக்கோடு கொண்ட பூனை இனங்களின் சராசரி ஆயுட்காலம் பொதுவாக 20-25 ஆண்டுகள் ஆகும். தங்கள் வாழ்நாளில், அவை வனப்பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடும். ஒரே நேரத்தில் 2 முதல் 3 குட்டிகளை இந்தப் புலிகளால் பெற்றெடுக்கவும் முடியும்.
2. கருஞ்சிறுத்தை (Black Panther)
கருஞ்சிறுத்தை என்பது சிறுத்தைதான், ஆனால் மெலனிசம் (melanism) எனப்படும் அரிய மரபணு மாற்றத்தால், அவை முற்றிலும் கருப்பு நிறமாக மாறி, அதற்கே உரித்தான தனித்துவமான பெயரைப் பெறுகின்றன. மரங்களில் மிக வேகமாக ஏறும் இந்த காட்டுப்பூனைகள் மிக வேகமானவை மற்றும் அற்புதமான பார்வைத் திறனைக் கொண்டவை.
3. இந்திய சிறுத்தை (Indian Leopard)
பெரிய காட்டுப் பூனை வகையை நாடு முழுவதும் காணலாம். 2014 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தம் 7 ஆயிரத்து 910 சிறுத்தைகள் உள்ளன. தோராயமாக 12,000 சிறுத்தைகள் இருக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. இதில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தியாவில் அதிகபட்சமாக சுமார் ஆயிரத்து 800 சிறுத்தைகளைக் கொண்டுள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
4. ஆசிய சிங்கம் (Asiatic Lion)
ஆசிய சிங்கங்கள் அவற்றின் இயற்கையான வாழ்விடத்தில் வாழும் உலகின் ஒரே நாடு இந்தியா மட்டுமே. சிங்கங்கள் பொதுவாக 8 முதல் 30 சிங்கங்கள் கொண்ட குழுக்களாக வாழ்கின்றன. பெரும்பாலும், குழுவில் உள்ள பெண் சிங்கங்களே வேட்டையாடி, குட்டிகள் மற்றும் குழுவில் உள்ள ஆண் சிங்கங்களின் பசியைப் போக்குகின்றன. இந்தக் காட்டுப் பூனை குடும்பத்தின் வளர்ந்த ஆண் சிங்கம் சுமார் 180 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும், அதே சமயம் வளர்ந்த பெண் சிங்கம் 130 கிலோகிராம் எடையுள்ளதாக இருக்கும்.
5. பனிச்சிறுத்தை (Snow Leopard)
பனிச்சிறுத்தைகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றன. இந்த தனித்துவமான உயிரினங்கள் பாறைகள் நிறைந்த நிலப்பரப்புகளையும், செங்குத்தான சரிவுகளையும் விரும்புகின்றன.தங்கள் இரையை உயரத்திலிருந்து பதுங்கிப்பிடிக்க உதவுகிறது. மற்ற பெரிய பூனைகள் மற்றும் சிறுத்தைகளுடன் ஒப்பிடும்போது பனிச்சிறுத்தை அளவில் சிறியது. பனிச்சிறுத்தையின் நிற்கும் உயரம் தோராயமாக 2 அடி மற்றும் சராசரி எடை 35-55 கிலோகிராம் வரை இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.