Advertisment

உஷார் மக்களே! சர்வதேச எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள்? உடனே இதை செய்யுங்க

சமீபத்தில் பலரது வாட்ஸ்அப் எண்களுக்கு சர்வதேச எண்களில் இருந்து போலி அழைப்புகள் வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rs 62 lakh money laundering from an army soldier in Puducherry

Salem police

நாடு முழுவதும் இணைய வழி மோசடி அதிகரித்து வருகிறது. வாட்ஸ் அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைதளங்களை குறிவைத்து மோசடிகள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்-பில்

சர்வதேச எண்களில் இருந்து போலி அழைப்புகள் வருவதாக சமூக வலைதளங்களில் பயனர்கள் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

பகுதி நேர வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி தொடர்பு கொள்வதாக பயனர்கள் புகார் தெரிவித்துள்ளனர். பகுதி நேர வேலைகள் என்று வரும்போது இந்தியர்கள் எளிதான இலக்கிற்கு ஆளாகின்றனர். இதைப் பயன்படுத்தி பயனர்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் திருடுகின்றனர்.

இது குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சர்வதேச எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் வந்தால் நீங்கள் செய்ய வேண்டியவை இவை மட்டுமே.

அழைப்பை எடுக்க வேண்டாம்

சர்வதேச எண்களுடன் அழைப்பு வந்தால் அதை எடுக்காமல் விட்டு விடவேண்டும். இது பெரிய மோசடியில் இருந்து தப்பிக்க உதவியாக இருக்கும்.

பரிசு வழங்குவதாக மெசேஜ்

பணம் கொடுப்பதாகவும், பரிசு கொடுப்பதாகவும் வரும் வாட்ஸ்அப் மெசேஜ்களுக்கு பதில் அளிக்க கூடாது. பரிசு அல்லது லாட்டரி உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று கூறி சர்வதேச எண்களில் மெசேஜ் வந்தால் அது மோசடியாக இருக்கலாம். இந்த மெசேஜ்களுக்கு பதிலளிக்க வேண்டாம், தேவைப்பட்டால் வாட்ஸ்அப்பில் புகாரளிக்க

பிளாக் செய்து புகார் செய்யவும்

தெரியாத எண், சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வந்தால் பிளாக் செய்து புகார் செய்யலாம். புகார் செய்ய உங்கள் வாட்ஸ்அப் கால் லாக் (call log) சென்று அந்த நம்பரை Tap செய்து Report the number என்ற ஆப்ஷனை கொடுக்கவும்.

Two-factor authentication

பாதுகாப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்த Two-factor authentication அம்சத்தை எனேபில் செய்யவும். உங்கள் அக்கவுண்டில் உள்நுழையும்போது பாஸ்வேர்டுடன் கூடுதலாக Verification code-ம் உள்ளிடப்பட வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment