ஸ்மார்ட் போன்களில் அதிகம் சர்வீஸ் செய்யப்படும் பொருள் பேட்டரி ஆகும். இதை உரிய முறையில் பாதுகாப்பது அவசியம். போன் பேட்டரிகளை உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இதற்கு சில சிம்பிள் டிப்ஸ் பாலோ செய்தால் போதும். அதுகுறித்து இங்கு பார்ப்போம்.
80% மேல் சார்ஜ் செய்ய வேண்டாம்
ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் முழுமையாக சார்ஜ் செய்வது பேட்டரியில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எப்போதும் 80% வரை சார்ஜ் செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. சமீபத்திய ஐபோன்கள் மற்றும் Asus போன்ற சில ஸ்மார்ட்போன்களில் பேட்டரி 80% சார்ஜ் ஆனதும் தானாகவே சார்ஜ் செய்வதை நிறுத்திக் கொள்ளும் வகையில் அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது.
20%க்கு கீழ் சார்ஜை கொண்டு வர வேண்டாம்
உங்கள் ஸ்மார்ட்போனை 100% சார்ஜ் செய்வது மட்டுமின்றி, முழுமையாக டிஸ்சார்ஜ் செய்வதும் (20%க்கும் கீழ் குறைவான சார்ஜ்) கொண்டிருப்பதும் பேட்டரியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். எப்போதும் சராசரி ஸ்மார்ட் போன் பேட்டரி அளவைப் பராமரிக்க வேண்டும். 20% ஆனதும் சார்ஜ் செய்யத் தொடங்கவும். முன்பு குறிப்பிட்டபடி, 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வது நல்லது.
நல்ல தரமான சார்ஜரைப் பயன்படுத்தவும்
ஸ்மார்ட் போனுடன் வரும் சார்ஜரைப் பயன்படுத்த எப்போதும் அறிவுறுத்தப்படுகிறது. இருப்பினும் போன் வாங்கும் போது சார்ஜ்ர் கொடுக்கப்படவில்லை எனில் நல்ல தரமான நிறுவனத்தின் சார்ஜர் பயன்படுத்த வேண்டும். அப்போது தான் சரியான அளவு மின்சாரம் மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆகியவை பெற முடியும்.
ஓவர் ஹீட்டிங் செய்யக் கூடாது
ஓவர் ஹீட்டிங் (Overheating) பேட்டரி ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் கேம் விளையாடுகிறீர்கள் என்றால் போன் கூலிங் செய்ய உங்கள் போன் கேஸ் கவரை அகற்ற வேண்டும். அதே போல், போன் Overheating ஆனால் குளிர்ச்சியடையும் வரை பயன்படுத்த வேண்டாம்.
சாப்ட்வேர் அப்பேட்
சிறந்த பேட்டரி ஆயுளை அனுபவிக்க, உங்கள் ஸ்மார்ட்போனை சமீபத்திய வெர்ஷனுக்கு சாப்ட்வேர் அப்பேட் செய்ய வேண்டும். சாப்ட்வேர் அப்பேட் உங்கள் பேட்டரி ஹெல்தை மேம்படுத்தும். எப்போதும் சாப்ட்வேர் அப்பேட் செய்ய உங்கள் பேட்டரி 50%க்கு மேல் சார்ஜ் இருப்பதை உறுதி செய்யவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil