பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ இணையத்தில் வைரலானது முதல், இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. ராஷ்மிகாவின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் புகைப்படமும் தவறாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. ‘டைகர்-3‘ படத்தின்
சண்டைக் காட்சியில் வரும் சீன் ஒன்றை ஸ்கிரீன் கிராப் செய்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
பிரபல நடிகைகளை குறைவாக காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வீடியோக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ராஷ்மிகாவின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து நடிகர், நடிகைகள் முதல் தனி நபரும் இது போன்ற
குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து மத்திய அமைச்சர் ராஜீவ் ஏ.ஐ டீப்ஃபேக் குறித்து எச்சரிக்கை விடுத்தார்.
டீப்ஃபேக் கண்டறிய வழிகள்
கண்களைப் பாருங்கள்
2018-ல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியில், டீப்ஃபேக் வீடியோக்களில் மனிதர்கள் இயல்பாக கண்களை சிமிட்டுவதில்லை என்று கூறியது. இருப்பினும், மந்தனா வீடியோவில், அவர் இரண்டு முறை கண் சிமிட்டுவதை பார்க்கலாம். அதை உன்னிப்பாக கவனித்தால் கண்கள் வித்தியாசமாகத் தெரிகிறது.
உதடுகளைப் பார்க்கவும்
டீப்ஃபேக்குகள், பெரும்பாலும் மோசமான தரம் கொண்டவை. முக்கியமாக உதட்டு அசைவுகள். இவை
காரணமாக எளிதில் கண்டறியலாம். ஆடியோவின் அடிப்படையில் உதடுகள் அசையும் விதத்தைப் பாருங்கள். டீப்ஃபேக் வீடியோக்கள் சில முரண்பாடுகளைக் காட்டலாம்.
ஸ்கின் (Skin)
வீடியோவில் இருப்பவரின் தோலின் நிறம் மாறுபட்டிருக்கலாம். உண்மையான வீடியோவின் நிறத்துடன் சேராமல் இருக்கலாம். மேலும், விசித்திரமான உடல் அசைவுகள் அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
முடி மற்றும் பற்கள்
முடியில் நுணுக்கமான விவரங்கள் உள்ளன. டீப்ஃபேக் மென்பொருள்கள் அதை அவ்வளவு நேர்த்தியாக செய்ய முடியாது. போலி வீடியோகளை முடி அசைவுகளை வைத்து கண்டறியலாம். சில நேரங்களில், பற்கள் கூட உதவலாம். அவையும் இயற்கைக்கு மாறாக இருக்கும்.
ஜூவல்லரி
அந்த வீடியோவில் இருப்பவர் நகை அணிந்திருந்தால், கண்டறிவது எளிது. ஏனெனில் லைட்டிங் எபெக்ட்ஸ் காரணமாக அவை போலி வீடியோக்களுடன் ஒத்துக் போகாது.
டீப்ஃபேக் எவ்வாறு செய்யப்படுகிறது?
இது ஏ.ஐ அல்காரிதம் உடன் செய்யப்படுகிறது. அல்காரிதம் 2 முகங்களுக்கிடையே உள்ள ஒற்றுமைகளைக் கண்டறிந்து பின்னர் அவற்றை பொதுவாகப் பகிரப்படும் அம்சங்களுடன் சேர்க்கிறது. இரு முகங்களிலும் வெவ்வேறு செட் டிகோடர்கள் உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/artificial-intelligence/rashmika-mandanna-katrina-kaif-deepfake-how-to-spot-9017658/
டீப்ஃபேக்கை உருவாக்க, கிரியேட்டர் 2 முகங்களை டிகோடர்களில் இருந்து மாற்ற வேண்டும். எ.கா நபர் X-ன் compressed இமேஜ் டீகோடரில் செலுத்தப்படுகிறது, இது Y நபர் மீது மாற்றப்படுகிறது. பின்னர், டிகோடர் Y இன் வெளிப்பாடுகளின் அடிப்படையில் X இன் முகத்தை மறுகட்டமைக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.