வாட்ஸ்அப் பயனாளர்கள் குஷி…2022இல் வரவிருக்கும் 5 முக்கிய அப்டேட்கள்

டெலிகிராம் செயலியுடன் ஒப்பிட்டால் வாட்ஸ்அப்பில் வசதி சிறிது குறைவாக காணப்படுகிறது. அவற்றை சரிசெய்யும் வகையில், 2022இல் வாட்ஸ்அப் ஐந்து முக்கிய மாற்றங்களை கொண்டு வர முடிவுசெய்துள்ளது.

இன்று நாம் எந்த வித தகவல்களையும் பிறருக்கு தெரிவிக்க நினைத்தாலும் உடனே நமது நினைவுக்கு வருவது வாட்ஸ்அப் செயலி தான்.

உலகளவில் பல சாட்டிங் செயலிகள் இருந்தாலும், வாட்ஸ்அப் செயலிக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. நிறுவனமும் வாடிக்கையாளர்களை கவர அப்போது புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

அண்மையில், மல்டி டிவைஸ் சப்போர்ட், மெசேஜ் தானாக டெலிட் ஆகும் வசதி என பலவற்றை பயனாளர்களுக்காக வெளியிட்டது. ஆனால், டெலிகிராம் செயலியுடன் ஒப்பிட்டால் வாட்ஸ்அப்பில் வசதி சிறிது குறைவாக காணப்படுகிறது. அவற்றை சரிசெய்யும் வகையில், 2022இல் வாட்ஸ்அப் ஐந்து முக்கிய மாற்றங்களை கொண்டு வர முடிவுசெய்துள்ளது. அதனை இச்செய்திதொகுப்பில் விரிவாக காணலாம்.

சாட் தீம் சப்போர்ட்

வாட்ஸ்அப் தனிப்பட்ட சாட் திரையை பயனாளர்களின் வசதிக்கேற்ப வடிவமைத்து வருகிறது. வால்பேப்பர் மாற்றுவது, இரவு நேரத்தில் டார்க் தீம் உபயோகிப்பது போன்ற வசதிகளை வழங்கியுள்ளது. இருப்பினும், டெலிகிராம், இன்ஸ்டாகிராமில் இருக்கும் தீம் ஆப்ஷன் இதுவரை அளிக்கப்படவில்லை. வாடிக்கையாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, அடுத்தாண்டு உங்களது விருப்பமானவர்களுடன் சாட் செய்கையில் தீம் ஆப்ஷன் வசதியை வழங்கவுள்ளது. பல தரப்பான தீம் ஆப்சன்கள் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சாதனங்களின் ஆதரவை அதிகரிக்க திட்டம்

வாட்ஸ்அப்பின் மல்டி-டிவைஸ் வசதி, தற்போது உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நீங்கள் உபயோகிக்கும் ஸ்மார்ட்போன் தவிர மேலும் நான்கு சாதனங்களுடன் இணைக்க அனுமதிக்கிறது. இன்றைய மல்டி-ஸ்கிரீன் உலகில், பல சாதனங்களை வெவ்வேறு பணிகளுக்காக உபயோகிப்பவர்களுக்கு நான்கு எண்பது குறைவானதாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, இந்த அப்டேட் கொண்டு வரவுள்ளது. WhatsApp Webக்கு பல டெஸ்க்டாப்புகள்/லேப்டாப்கள் மற்றும் பிரவுசர்களை உபயோகிக்கும் நபர்களுக்கு, இந்த அப்டேட் உதவியாக இருக்கும்.

கணக்கு தானாக டெலிட்

டெலிகிராமில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால், டைமர் மூலம் கணக்கை டெலிட் செய்வதற்கான வசதி உள்ளது. மேலும், பாதுகாப்பு நோக்கில் சம்பந்தப்பட்ட நபர் கணக்கை நீண்டு நாள்களுக்கு உபயோகிவிட்டால், தானாகவே டெலிட் செய்யப்படும்.

ஆனால், வாட்ஸ்அப்பில் நாம் கணக்கை டெலிட் செய்ய, Settings செல்ல வேண்டும். எனவே, இந்த புதிய அப்டேட் செல்போன் தொலைந்துவிட்டால், சிம் கார்டுகளை இழந்தால் மற்றும் அவர்களின் கணக்கை அணுக முடியாமல் போனால், டெலிட் செய்ய உதவியாக இருக்கும்.

ரீப்பிட்டூ

நீங்கள் போன் சிறிது நேரம் உபயோகிக்காத போது, பல தரப்பு செயலிகளிலிருந்து ஏகப்பட்ட நோட்டிபிகேஷன்கள் வந்திருக்கும். இதில்,வாட்ஸ்அப்பில் வந்த முக்கிய மெசேஜை பார்க்காமல் போகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, ரீப்பிட் நோட்டிபிகேஷன் அம்சம் மூலம், மெசேஜ் தொடர்பான அலர்ட் மீண்டும் தோன்றும். இதன் மூலம், முக்கியமான மெசேஜ் எவ்வளவு பிஸினாலும் மிஸ் செய்துவிட மாட்டோம்.

WhatsApp Pay ஐகானை நீக்குதல்

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் செயலி வழியாக பணம் அனுப்பும் வாட்ஸ்அப் பே வசதியை கொண்டு வந்தது. இந்த அம்சம் பணம் அனுப்பவர்களுக்கு நிச்சயம் உதவியாக தான் இருக்கும். ஆனால், இந்த வாட்ஸ்அப் பே ஷாட்கட் ஐகான், ‘Type your message here’பாரில் இடம்பெற்றுள்ளது. இது, வாட்ஸ்அப் பே உபயோகிக்காத நபர்களுக்கு சிக்கலாக இருப்பதாக புகார் எழுந்தது. எனவே, அந்த பட்டனை வெறு இடத்தில் மாற்றுவதற்கான பணிகளை அடுத்தாண்டு வாட்ஸ்அப் மேற்கொள்ளவுள்ளது. விரைவில், அந்த பே ஐகான் நமது மெசேஜிங் பாரிலிருந்து மறைந்துவிடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 5 whatsapp features and changes love to see in 2022

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express