/tamil-ie/media/media_files/uploads/2022/08/WhatsApp-1.jpg)
வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்திவருகிறது.
வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல அம்சங்கள் பற்றி பலருக்கும் தெரிவது இல்லை. அந்தவகையில் வாட்ஸ்அப்பில் இருக்கும் 5 வசதிகள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
வாட்ஸ்அப் குரூப் புளூ டிக்
வாட்ஸ்அப் சேட் போல் வாட்ஸ்அப் குரூப் மெசேஜிலும் மற்றவர்கள் அனுப்பிய மெசேஜ் படித்துவிட்டோம் என்றால் புளூ டிக் காண்பிக்கும். அனுப்பியவர்களுக்கு நாம் அவர்கள் அனுப்பிய மெசேஜை படித்து விட்டோம் என்பது தெரிய வரும்.
அந்தவகையில் வாட்ஸ்அப் குரூப்பை ஓபன் செய்யாமல் மெசேஜை நோட்டிபிகேஷன் வழியாக ஈஸியாக பார்த்து கொள்ளலாம். ஆனால் அதிலும் சிக்கல் உள்ளது. நிறைய மெசேஜ் படிப்பதில் சிரமம் இருக்கும். இதற்கு எளிமையாக ஹோம்ஸ் ரீன் (Homescreen) பக்கத்தில் WhatsApp widget வைத்துக் கொள்ளலாம். WhatsApp widget மினி விண்டோஸ் மூலம் நீங்கள் படிக்காமல் வைத்திருக்கும் மெசேஜ், குரூப் மெசேஜை scroll செய்து பார்த்துக் கொள்ளலாம். வாட்ஸ்அப் குரூப்பிற்கு செல்லாமல் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இதற்கு, போன் homescreen பக்கத்திற்கு சென்று blank areaவில் வைத்து லாங்- பிரஸ் செய்து homescreen ஆப்ஷன் கிளிக் செய்ய வேண்டும். அதில் widgets சென்று, three WhatsApp widgets ஆப்ஷனில் இராண்டாவது கிளிக் செய்து homescreen பக்கத்தில் கொண்டு வந்து வைக்கவும். 4×4 ரீசைஸ் செய்து வைக்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-tricks-1.jpg)
disappearing chatsக்கு டைமர்
வாட்ஸ்அப்பில் ஒவ்வொரு contacts-க்கும் disappearing chats வசதி உள்ளது. அதாவது இந்த வசதியை ஆன் செய்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு புதிதாக வந்த மெசேஜ் டெலிட் ஆகி விடும். வாட்ஸ்அப் பிரைவசி அம்சத்தை மேம்படுத்த இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் கூடுதல் வசதியாக ஆட்டோமேட்டிக்காக புது மெசேஜ் டெலிட் ஆகும் வகையில் டைமர்
வசதி உள்ளது. அதாவது புது மெசேஜிற்கு ஒவ்வொரு முறையும் ஆன் செய்து அழிக்க தேவையில்லை. டைமர் செட் செய்து விட்டால் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு தானாக அழிந்துவிடும்.
இதற்கு முதலில் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் மெனு சென்று ஆக்கவுண்ட் பக்கத்திற்கு செல்ல வேண்டும். அங்கு Default Message Timer setting கொடுத்து, disappearing chatsக்கு மொத்தமாக டைமர் செட் செய்து கொள்ளலாம்.
ஹை குவாலிட்டி போட்டோ
பொதுவாக நாம் ஒருவருக்கு வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்புகிறோம் என்றால் அதன் குவாலிட்டி குறைவாக இருக்கும். ஒரிஜினல் போட்டோவிற்கும் நாம் வாட்ஸ்அப்பில் அனுப்பும் போட்டோவிற்கும் வித்தியாசம் தெரியும். அந்தவகையில் ஹை குவாலிட்டி போட்டோ அனுப்பும் வகையில் டேட்டா அமைப்பை மாற்றிக் கொள்ளலாம்.
வாட்ஸ்அப் செட்டிங்ஸ்- ஸ்டோரேஜ்- டேட்டா பக்கத்திற்கு சென்று scroll down செய்து,
போட்டோ அப்லோட் குவாலிட்டி (Photo upload quality) செலக்ட் செய்ய வேண்டும். ‘Best quality’ஆப்ஷன் செலக்ட் செய்து போட்டோ அனுப்பலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-tricks-2.jpg)
சேட்/குரூப் shortcuts homescreen
ஒரு குறிப்பிட்ட நபர்கள் மற்றும் குரூப்பிற்கு சார்ட் கட் கிரீயேட் செய்து homescreenயில் வைத்து பயன்படுத்தலாம். வாட்ஸ்அப் ஓபன் செய்யாமல் அவர்களிடமிருந்து வரும் மெசேஜ் படித்துக் கொள்ளலாம். அதற்கு, தனி நபர் சேட்/குரூப் ஓபன் செய்து வலப்புறத்தில் உள்ள 3 புள்ளி ஆப்ஷனை கிளிக் செய்து ‘more’ ஆப்ஷன் கொடுக்கவும்.
அதில் கடைசியாக உள்ள ‘Add shortcut’கிளிக் செய்ய வேண்டும். இப்போது வாட்ஸ்அப் shortcut icon வந்து விடும். அதை உங்கள் homescreen பக்கத்தில் வைத்துக் கொள்ளலாம்.
வாட்ஸ் அப் ஸ்டோரேஜ்
வாட்ஸ் அப்பில் போட்டோஸ், வீடியோ வந்து குவிந்திருக்கும். இதனால் உங்கள் வாட்ஸ் அப் ஸ்டோரேஜ் நிரம்பி இருக்கும். இதை தவிர்க்க வாட்ஸ் அப் ஸ்டோரேஜ் பயன்படுத்தலாம்.
இதற்கு, வாட்ஸ் அப் செட்டிங்ஸ் சென்று ஸ்டோரேஜ் அண்ட் டேட்டா சென்று மேனேஜ் ஸ்டோரேஜ் ஆப்ஷன் செல்ல வேண்டும். அங்கு உங்களுடைய தனிப்பட்ட சேட் ஸ்டோரேஜ், குரூப் ஸ்டோரேஜ் மற்றும் போட்டோ, வீடியோ டெலிட் செய்து ஸ்டோரேஜ் ப்ரீ செய்யலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/WhatsApp-tricks-3.jpg)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.