பார்தி ஏர்டெல், டெல்லி, வாரணாசி, நாக்பூர், பெங்களூர், ஹைதராபாத், மும்பை, சென்னை மற்றும் சிலிகுரி என 8 இடங்களில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்குகிறது.
இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் சில நகரங்களில் சேவையைத் தொடங்கியுள்ளன. ஏர்டெல் 8 நகரங்களிலும், ஜியோ 4 நகரங்களிலும் சேவையைத் தொடங்கியுள்ளன. ஜியோ ஸ்டாண்ட் அலோன் முறையில் சேவை வழங்குகிறது. ஏர்டெல் நான்- ஸ்டாண்ட் அலோன் முறையில் சேவை வழங்குகிறது.
Advertisment
இந்நிலையில், நிறுவனங்கள் சில நகரங்களில் சேவை வழங்கினாலும், அங்குள்ள பயனர்களாலும் 5ஜி பயன்படுத்த முடியவில்லை. காரணம் அவர்கள் மொபைல் போன் அப்டேட் கிடைக்கப் பெறாமல் உள்ளது.
ஆப்பிள் முதல் சாம்சங், ரியல்மி, ஒன்பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரை தங்களது மொபைல் போன்களுக்கு 5ஜி சேவைக்கான சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கவில்லை. சில போன்களில் மட்டுமே நேடியாக 5ஜி பயன்படுத்தும்படி உள்ளது. இந்நிலையில் ஆப்பிள் முதல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் வரை தங்களது 5ஜி மென்பொருள் அப்டேட் (software update) குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளன.
ஆப்பிள்
ஆப்பிள் நிறுவனம் வருகிற டிசம்பர் மாதம் தங்களது ஐபோன் பயனர்களுக்கு 5ஜி மென்பொருள்அப்டேட் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
iPhone 12, iPhone 13 and iPhone 14 series, iPhone SE 2022 (Gen-3) மாடல் போன்களுக்கு டிசம்பர் மாதம் அப்டேட் வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
சாம்சங் (Samsung)
சாம்சங் Galaxy S22 சீரிஸ், Galaxy A33, Galaxy M33, Galaxy Z Flip 4, Galaxy Z Fold 4 போன்ற புதிய மாடல் சாம்சங் போன்கள் ஏற்கனவே 5ஜி சேவை ஆதரிக்கிறது. சாம்சங் பழைய மாடல் 5ஜி போன்களில் நவம்பர் மாதம் மென்பொருள் அப்டேட் கொடுக்கப்படும் எனக் கூறியுள்ளது.
நத்திங் (Nothing)
நத்திங் நிறுவனம் தற்போது ஒரே ஒரு போன் மட்டுமே சந்தைப்படுத்தியுள்ளது. நத்திங் போன் (1) மட்டுமே உள்ளது. அதிலும் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. அப்டேட் எதுவும் தேவையில்லை. இருப்பினும், ஏர்டெல் 5ஜி சேவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால் ஜியோ ஸ்டாண்ட் அலோன் அப்டேட் இந்த தீபாவளிக்கு கொடுக்கிறது.
ஒன்பிளஸ் (OnePlus)
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 1 ஆண்டுகளாக பல 5ஜி போன்களை வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸின் பெரும்பாலான போன்களில் நேரடியாக 5ஜி சேவை பெறமுடியும். அப்டேட் இல்லாமல் நேரடியாக பெற முடியும். சில போன்கள் மட்டும் அப்டேட் பெற வேண்டும். அவை, OnePlus 8, OnePlus 8T, OnePlus 8 Pro, OnePlus Nord 2 and OnePlus 9R. இந்த போன்களுக்கு விரைவில் 5ஜி மென்பொருள் அப்டேட் வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
மோட்டோரோலாவின் சில மாடல் போன்கள் 5ஜி மென்பொருள் அப்டேட்-க்கு காத்திருக்கின்றன. Edge 30-series phones, Edge-20 series phones, Moto G 5G, Moto G51, G17, G62 and G82 போன்கள் 5ஜி பயன்படுத்த மென்பொருள் அப்டேட் பெற வேண்டும்.
மோட்டோரோலா நிறுவனமும் 5ஜி மென்பொருள் அப்டேட்டுக்கான அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நிறுவன ஸ்மார்ட்போன்கள்
Xiaomi, Redmi, Poco, Realme, Oppo, Vivo, iQOO and Infinix நிறுவன ஸ்மார்ட்போன்களில் ஏற்கனவே 5ஜி பயன்படுத்துவதற்கான அப்டேட் கொடுக்கப்பட்டு இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்களில் அப்டேட் வழங்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
Asus, Honor, LG, Nokia மற்றும் Tecno நிறுவனங்கள் தங்களது 5ஜி மென்பொருள் அப்டேட் குறித்தான தகவல்களை இன்னும் வெளியிடவில்லை. விரைவில் தங்கள் பயனர்களுக்கு 5ஜி அப்டேட் குறித்தான தகவல்களை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.