பி.எஸ்.என்.எல்.க்கு ₹ 89,047 கோடி தொகுப்புக்கு மத்திய அமைச்சரவை இன்று (ஜூன் 7) ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், “இந்த தொகுப்பில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஈக்விட்டி இன்ஃப்யூஷன் மூலம் 4ஜி மற்றும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் அடங்கும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
மேலும், பிஎஸ்என்எல்லின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹ 1,50,000 கோடியிலிருந்து ₹ 2,10,000 கோடியாக உயர்த்தப்பட உள்ளது. இந்த தொகுப்பில் பிரீமியம் வயர்லெஸ் அதிர்வெண்கள் 700 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் ஸ்பெக்ட்ரம் மதிப்பு ₹ 46,338.6 கோடி ஆகும்.
தொடர்ந்து, ₹ 26,184.2 கோடி மதிப்புள்ள 3300 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் 70 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசைகள், ₹ 6,564.93 கோடி மதிப்புள்ள 26 GHz அலைவரிசைகள், ₹ 9,428.2 கோடி மதிப்புள்ள 2500 மெகா ஹெர்ட்ஸ் பேண்ட் மற்றும் இதர பொருட்களுக்கு ₹ 531.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தொகுப்புகளின் விளைவாக, பிஎஸ்என்எல் மொத்தக் கடன் ₹ 32,944 கோடியிலிருந்து ₹ 22,289 கோடியாகக் குறைந்துள்ளது. முன்னதாக, 2019 இல் BSNL மற்றும் MTNL க்கு ₹ 69,000 கோடி மதிப்பிலான முதல் மறுமலர்ச்சி தொகுப்பை அரசாங்கம் வழங்கியது. 2022 இல் ₹ 1.64 லட்சம் கோடி மதிப்பிலான இரண்டாவது தொகுப்பு அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“