/indian-express-tamil/media/media_files/2025/10/01/spotify-alternatives-2025-10-01-14-42-06.jpg)
'ஸ்பாட்டிஃபை போர் அடிச்சிருச்சா?'... Hi-Fi ஆடியோ தரம், டால்பி அட்மாஸ் வழங்கும் 8 பெஸ்ட் ஆஃப்ஸ்!
நீண்ட காலமாக ஸ்பாட்டிபை பிரீமியம் பயன்படுத்தி வந்தாலும், புதிதாக ஒன்றை முயற்சிக்க விரும்புகிறீர்கள் என்றால், இந்தப் பதிவு உங்களுக்காகத்தான். ஒரே மாதிரியான பாடல்கள், அதே கலைஞர்கள் என இல்லாமல், புதிய இசை, வித்தியாசமான கலைஞர்களைத் தேட (அ) கூடுதல் ஆஃபர்களைப் பெற நீங்க விரும்பினால், ஸ்பாட்டிபை-க்கு மாற்றாகக் களத்தில் இருக்கும் சிறந்த 8 ஆப்ஷன்களைப் பற்றி பார்க்கலாம். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லா மியூசிக் ஸ்ட்ரீமிங் ஆப்ஸும் ஒரே மாதிரி தோன்றினாலும், ஒவ்வொன்றிலும் உங்கள ஈர்க்கும் தனித்துவமான அம்சங்கள் நிச்சயம் உள்ளன.
1. யூடியூப் மியூசிக்
இப்போது சந்தையில் இருக்கும் ஸ்பாட்டிபை மாற்றுச் சேவைகளில் இதுதான் பலரின் விருப்பத் தேர்வாக இருக்கும். நல்ல டிசைன், சிறந்த இசை கண்டறிதல் (Music Discovery), மற்றும் எண்ணற்ற மியூசிக் வீடியோக்கள் இதில் உள்ளன. இந்த ஆஃப்பில் நீங்க அடிக்கடி கேட்கும் பாடல்களைப் பட்டியலிடும் “ஸ்பீடு டயல்” அம்சம், பாடல்களைத் தேடும் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. யூடியூப் பிரீமியம் சந்தாவுடன் இணைந்தே வருவதால், யூடியூபில் வரும் எரிச்சலூட்டும் விளம்பரங்களிலிருந்து விடுபடலாம். அதிக நேரம் யூடியூப் பார்ப்பவர்களுக்கு இது டபுள் ட்ரீட்! இதன் இலவச வெர்ஷனில், பாடலைக் கேட்கும்போது போன் டிஸ்ப்ளே-வை அணைக்க முடியாது. ப்ளூடூத் மூலம் காரில் ஸ்ட்ரீம் செய்ய இது சிரமமாக இருக்கும்.
2. டீசிர் (Deezer):
ஃப்ரெஞ்ச் ஸ்ட்ரீமிங் சேவை ஸ்பாட்டிபை அல்லது யூடியூப் மியூசிக் போல பிரபலம் ஆகாமல் இருக்கலாம், ஆனால் இது அதிகக் கவனம் பெற வேண்டிய ஆஃப். பல ஆண்டுகளாக இதை உபயோகித்தவர்கள், இதன் போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது எந்தக் குறையையும் காணவில்லை. இதன் “Flow” என்ற மியூசிக் கண்டறிதல் அம்சம் சிறப்பானது. இது உங்க மனநிலை அல்லது நீங்க விரும்பும் இசை பாணியின் அடிப்படையில் பாடல்களை மிக்ஸ் செய்து ப்ளே செய்கிறது. ஆஃப் வடிவமைப்பு அழகாகவும், பயன்படுத்த எளிதாகவும் உள்ளது. உங்களுக்குப் பிடித்த அனைத்து பாடல்களும் இதில் கிடைப்பது உறுதி. இதன் விலையும் ஸ்பாட்டிபை-க்கு இணையாகவே உள்ளது. இலவச பிளான் மற்றும் அனைத்து அம்சங்களையும் திறக்கும் ஒரு மாத ப்ரீ ட்ரையல் இதில் உண்டு.
3. சவுண்ட்க்ளவுட் (SoundCloud):
பிரபலமான, மெயின்ஸ்ட்ரீம் இசையை அதிகம் விரும்பாதவர்களுக்கு சவுண்ட்க்ளவுட் ஒரு சிறந்த வழி. இந்த ஆஃப் புதிதாக வளரும் (Up-and-coming) கலைஞர்களை மையமாகக் கொண்டது. ரேடியோவிலும், பிற தளங்களிலும் கேட்கும் அதே பழைய பாடல்களைக் கேட்பதை விட, புதிய கலைஞர்களின் இசையைக் கேட்டு அவர்களுக்கு ஆதரவளிப்பது உற்சாகமாக இருக்கும். இது சமூக அடிப்படையிலான (Community-driven) தளம். இங்கு ஒவ்வொரு பாடலுக்கும் கீழே கமெண்ட் செய்து, மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கலாம். இதன் சந்தா திட்டங்கள் மாதத்திற்கு $4.99-ல் இருந்து தொடங்குவதால், இது ஸ்பாட்டிபை-யை விடச் சற்று மலிவானது.
4. டைடல் (Tidal):
அதி உயர் ஆடியோ தரம் என்று வரும்போது, Tidal எப்போதும் முன்னணியில் இருக்கும். இதுதான் முதலில் லாஸ்லெஸ் ஆடியோவை (Lossless Audio) வழங்கத் தொடங்கியது. Tidal ஆனது 24-bit/192 kHz FLAC வரை ஹை-ஃபை லாஸ்லெஸ் ஆடியோவை வழங்குகிறது. (Spotify இப்போது 24-bit/44.1 kHz FLAC வழங்கினாலும், ஆடியோ தரத்தில் Tidal ஒரு படி மேலே இருக்கிறது). ஆடியோவைத் தவிர, இதில் பல பிரத்யேக வீடியோக்களும் உள்ளன. இந்த ஆஃப் பயன்படுத்த எளிதானது. குறிப்பாக ஹிப்-ஹாப் இசை ரசிகர்கள் மத்தியில் இது மிகவும் பிரபலமானது.
5. பேண்ட் கேம்ப் (Bandcamp):
இந்த பட்டியலில், Bandcamp சற்று வித்தியாசமானது. இது SoundCloud-ஐப் போலவே, பிரபலமாகாத கலைஞர்களுக்கான தளம் என்றாலும், இது ஒரு வழக்கமான சந்தா சேவை அல்ல. இதை ஆன்லைன் ரெக்கார்டு ஸ்டோர் மற்றும் சந்தை என்று அழைக்கலாம். நீங்க ஒவ்வொரு பாடலையும் அல்லது ஆல்பத்தையும் தனியாக வாங்க வேண்டும். நீங்க செலவழிக்கும் பணத்தின் பெரும்பகுதி நேரடியாகக் கலைஞர்களுக்கே செல்வதால், அவர்களுக்கு நேரடியாக ஆதரவளிக்க இது ஒரு சிறந்த வழி. நீங்க வாங்கிய அனைத்து இசையையும் Bandcamp ஆப் மூலம் ஸ்ட்ரீம் செய்து கேட்கலாம். வாங்குவதற்கு முன் பாடல்களைக் கேட்கும் வசதியும் உள்ளது. ஸ்பாட்டிபை-யிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்குகிறது.
6. அமேசான் மியூசிக்:
அமேசான் மியூசிக் என்பது அமேசான் நிறுவனத்தின் இசை ஸ்ட்ரீமிங் சேவை (Music Streaming Service) ஆகும். இது இந்தியாவில் மற்ற போட்டி தளங்களைப் போலவே (Spotify, Apple Music போன்றவை) திரைப்படப் பாடல்கள், சர்வதேச பாடல்கள், பாட்காஸ்ட்கள் ஆகியவற்றை வழங்குகிறது. நீங்க அமேசான் பிரைம் (Amazon Prime) சந்தாதாரராக இருந்தால், இந்த சேவை உங்களுக்குக் கூடுதல் கட்டணமின்றி இலவசமாகக் கிடைக்கும். தனியாக கட்டணம் இல்லை. விளம்பரங்கள் இல்லாமல் இசையை கேட்கலாம். 100 மில்லியன் பாடல்கள் கொண்ட பெரிய பட்டியலுக்கான அணுகல் கிடைக்கும்.
7. ஆப்பிள் மியூசிக் (Apple Music):
மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஆடியோ தரத்திற்கு (Audio Quality) அதிக முக்கியத்துவம் அளிக்கும் ஒரு பிரீமியம் தளமாகும். நீங்க இசையின் மிகச்சிறிய நுணுக்கங்களையும், தெளிவான ஒலியையும் கேட்க விரும்பும் ரசிகர் (Audiophile) என்றால், Apple Music தான் இந்தியாவில் உங்களுக்குச் சரியான தேர்வாக இருக்கும். ஆப்பிள் மியூசிக்-ஐ மற்ற போட்டித் தளங்களிலிருந்து தனித்துக் காட்டுவது அதன் புரட்சிகரமான ஆடியோ அம்சங்கள்தான். இது, சந்தா செலுத்தும் அனைவருக்கும் எந்தவிதக் கூடுதல் கட்டணமும் இன்றி Lossless ஆடியோ, ஸ்பேஷியல் ஆடியோ போன்ற முக்கிய அம்சங்களை வழங்குகிறது.
இதுபோக, இந்தியப் பாடல்கள் (Bollywood), பிராந்திய மொழிகள் (Regional Music) மற்றும் உள்ளூர் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்திய மியூசிக் ஆஃப்களும் உள்ளன.
JioSaavn: இந்திய இசைப் பட்டியலைக் (Hindi, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி உட்பட 16 மொழிகள்) கொண்ட மிகப் பெரிய தளங்களில் இதுவும் ஒன்று. Jio பயனர்களுக்குச் சலுகைகள் கிடைக்கும்.
Wynk Music: ஏர்டெல் நிறுவனத்தின் சேவை. இதன் சந்தாதாரர்களுக்குச் சலுகை விலையில் கிடைக்கிறது. பாடல்களை ஆஃப்லைனில் கேட்கும் வசதி மற்றும் Caller Tune வசதியை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
Gaana: பல இந்திய மொழிகளில் (21+ மொழிகள்) உள்ள பாடல்களின் மிகப் பெரிய தொகுப்பைக் கொண்டிருந்தது. இது அதன் உள்ளூர் இந்தியச் சந்தாவிற்காகப் பிரபலமானது.
Hungama Music: பழைய இந்திய இசையையும், சினிமா உள்ளடக்கத்தையும் (Movies) ஒரே தளத்தில் வழங்கும் ஒரு பழமையான இந்திய நிறுவனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.