இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகியவை தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களாக இருந்து வருகிறது. பி.எஸ்.என்.எல் மத்திய அரசு நிறுவனமாகும். இந்நிலையில் ஜியோ, ஏர்டெல் ஆகியவை கடந்த சில நாட்களுக்கு முன் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. 25% வரை கட்டணங்களை உயர்த்தின. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தற்போது மக்கள் மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்-க்கு படையெடுத்துள்ளன. பி.எஸ்.என்.எல் தற்போது 4ஜி சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 5ஜி வழங்கி வரும் நிலையில் பி.எஸ்.என்.எல் இப்போது 4ஜி வழங்கத் தொடங்கியுள்ளது.
4ஜி வழங்கத் தொடங்கி உள்ள நிலையிலும், தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கட்டணம் உயர்வு செய்துள்ள நிலையிலும் மக்கள் பலரும் பி.எஸ்.என்.எல்-க்கு மாறி வருகின்றனர்.
பி.எஸ்.என்.எல் குறைந்த விலையில் சேவைகளை வழங்குகிறது. இந்நிலையில், கடந்த 20 நாள்களில் 80,000 பயனர்கள் பி.எஸ்.என்.எல்-க்கு மாறி உள்ளதாக தகவல் கூறப்பட்டுள்ளது.
அதே நேரம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் இருந்து மாறுவோர் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 6.29%-ல் இருந்து 0.4% குறைந்தது.மதுரையில் மட்டும் 10,000 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். திருச்சியில் 16,000 பேர் புதிய சிம் வாங்கியுள்ளனர். சென்னையில் 40,000 பயனர்கள் பி.எஸ்.என்.எல்-க்கு வந்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“