827 porn websites : இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என 2014ம் ஆண்டு கமலேஷ் வாஸ்வானி என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அந்த வழக்கினை விசாரணையில் மத்திய அரசு சார்பில் “அனைத்து தளங்களையும் முடக்குவது இயலாத காரியம். அதற்கு நீதிமன்றம் உரிய உத்தரவினை பிறப்பிக்க வேண்டும்” என்று கூறியது. அதன் பின்னர் ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய அரசு முயற்சி எடுக்கையில், கடுமையான எதிர்ப்புகளை சந்தித்தது.
இந்நிலையில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் 857 ஆபாச இணைய தளங்களை பட்டியலிட்டு அதனை முடக்கும்படி உத்தரவிட்டது. அந்த 857 இணைய தளங்களில் 30 இணைய தளங்களில் ஆபாசமான கண்டெண்ட் எதுவும் இல்லை. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதனை தொடர்ந்து 827 ஆபாச இணைய தளங்களை முடக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் இணைய தள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டிருக்கிறது. குழந்தைகள் தொடர்பான ஆபாச இணைய தளங்களுக்கு இந்தியாவில் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.