Advertisment

500 அடி.. கட்டிட உயர ராட்சத சிறுகோள்; பூமியை நோக்கி வருகிறது

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜேபிஎல்) வரும் அக்டோபர் 24 அன்று பூமியைக் கடந்து செல்லும் 500 அடி அளவுள்ளசிறுகோளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
aster

நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்) வரும் அக்டோபர் 24 அன்று பூமியைக் கடந்து செல்லும் 500 அடி அளவுள்ளசிறுகோளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.  இந்த 
சிறுகோளின் அளவு பெரியதாக இருந்தாலும் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாது என்று 
நிபுணர்கள் உறுதியளிக்கின்றனர். 

Advertisment

மாறாக, இந்த நிகழ்வு பண்டைய விண்வெளி பொருட்களை ஆய்வு செய்ய சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இந்த சிறுகோள்கள் நமது சூரிய குடும்பம் உருவான காலத்திலிருந்தே உள்ளது என்று கூறியுள்ளனர். 

சிறு கோள்கள் என்பது சிறிய கோள்கள் ஆகும். இது நமது சூரிய மண்டலத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றன. அவை சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பம் உருவாகும் போது இருந்த பாறை எச்சங்கள் ஆகும். 

நாசா மேம்பட்ட கருவிகள் மூலம் சிறுகோள் நகர்வுளை கண்காணிக்கிறது. பூமியை அச்சுறுத்தும் சிறுகோள்கள் இருந்தால்  (PHAs) அவற்றை நாசா மற்ற விண்வெளி நிறுவனங்களுடன் இணைந்து கண்காணிக்கும். 

இப்போது நெருங்கும் சிறுகோள் 2024 TY21 பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தாது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனினும் இந்த நகர்வுகளை நாசா கண்காணித்து அதன் சேகரிக்கப்பட்ட தரவு கொண்டு எதிர்கால கணிப்புக்கு பயன்படுத்தும் என்றும் கூறினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment