41 கோடி ரூபாய் விலையில் வெளிவர இருக்கும் புகாட்டியின் ஹைப்பர் கார்...

லிமிட்டெட் எடிசன் கார் என்பதால் மொத்தமே 40 கார்களைத் தான் உருவாக்கி உள்ளது புகாட்டி நிறுவனம்.

புகாட்டி டிவோ : ஹைப்பர் கார்கள் மற்றும் ரேஸ் கார்கள் தயாரிப்பு நிறுவனமான புகாட்டி ஆகஸ்ட் மாத இறுதியில் தன்னுடைய புதிய லிமிட்டெட் எடிசன் ஹைப்பர் காரினை அறிமுகப்படுத்தியது. டிவோ என்ற பெயருடன் வெளிவந்திருக்கும் இந்த கார் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணத்தில்  அமைந்திருக்கிறது.

புகாட்டி 110 வருட நிறைவில் வெளியாகும் டிவோ

நீல நிறத்தில் இருவர் மட்டும் பயணிக்கும் டிவோ, புகாட்டி நிறுவனம் தொடங்கி 110 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது. கார் பந்தைய வீரர் ஆல்பெர்ட் டிவோவின் நினைவாக இந்த காருக்கு டிவோ என்று பெயர் இடப்பட்டுள்ளது.

புகாட்டி டிவோ

புகாட்டி டிவோவின் உள் தோற்றம்

எளிதில் மக்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த டிவோவின் வேகம் கற்பனைக்கும் எட்டாதது. 1500 குதிரைத் திறன் கொண்ட இந்த டிவோ ஒரு மணிக்கு 380 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் பறக்கும் சக்தி கொண்டது.

8 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள இந்த டிவோவில் மொத்தம் நான்கு டர்போ சார்ஜர்கள் உள்ளன. இதனுடைய பவர் அவுட்புட் 1103 கிலோ வாட்ஸ் ஆகும். இதனுடைய டார்க்யூ செயல் திறன் 1600 என்.எம் ஆகும்.

கார்பன் ஃபைபர் மூலம் இந்த கார் உருவாக்கப்பட்டிருப்பதால் காரின் எடை முந்தைய சிரோன் மாடலை விட சற்று குறைவு தான்.

புகாட்டி சிரான் vs புகாட்டி டிவோ

புகாட்டி டிவோ, புகாட்டி சிரான்

புகாட்டி டிவோ பின்புறத் தோற்றம்

இதற்கு முன்பு புகாட்டி, சிரான் என்ற சூப்பர் காரினை வெளியிட்டிருந்தது. புகாட்டியின் பிரியர்கள் மத்தியில் சிரானிற்கு எப்போதும் தனி சிறப்பு இருப்பதற்கு காரணம் அதன் வேகம் தான். மணிக்கு சுமார் 420 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

ஆனால் டிவோவின் அதிகப்பட்ச வேகம் என்பது மணிக்கு 380 தான். இருப்பினும் ரேசிங் புளு ஷேட் முன்பக்க அமைப்பு மற்றும் டைட்டானியம் லிக்விட் சில்வர் நிறம் அனைவரையும் கிறங்கவைக்கும் அமைப்பில் இருக்கிறது.

ஆனாலும் இந்த லிமிட்டெட் எடிசன் என்பது மிகவும் லிமிட்டட் தான். மொத்தமும் 40 கார்களையே உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியிருக்கிறார்கள் புகாட்டி நிறுவனத்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Technology news in Tamil.

×Close
×Close