/indian-express-tamil/media/media_files/2025/05/31/4TvBHV4FMBV3hnFGzpVt.jpg)
சூரிய குடும்பத்தில் பிளானட் நைன்: குட்டி கிரகம் கண்டுபிடிப்பு - அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை!
சூரியனைச் சுற்றி வரும் பூமி உள்ளிட்ட கிரகங்கள் சூரியக் குடும்பத்தில் அடங்கும். அதேபோல், சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகங்கள் அல்லது வெளிப்புற கோள்கள் (எக்ஸோபிளானட்ஸ்) என்றழைக்கப்படுகின்றன. இந்தநிலையில், ஒரு காலத்தில் சூரியன் உள்பட 7 கிரகங்கள் மட்டுமே அறியப்பட்ட நிலையில், விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சியால், சூரிய மண்டலத்திலேயே அதிக தொலைவில் அமைந்துள்ள சனி கிரகத்திற்கும் அப்பால், யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ உள்ளிட்ட கிரகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. இன்றும் புளூட்டோ கிரகத்திற்கும் அப்பால் கிரகங்கள் உள்ளதா? உயிரினங்கள் வாழ்கிறதா? என்ற விஞ்ஞானிகளின் சந்தேகம் இன்னும் தீர்ந்தபாடில்லை.
1930-ஆம் ஆண்டில், வானியலாளர்கள் பிளானட் 'எக்ஸ்'-ஐ தேடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் புளூட்டோவைக் கண்டு பிடித்தனர். அதன் ஒரு பகுதியாக தற்போது புளூட்டோ கிரகத்தை தாண்டி, சூரிய மண்டலத்தின் விளிம்பில் பெரிய மற்றும் மர்மமான கிரகம் நமது பார்வையிலிருந்து விலகி பதுங்கியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அந்த கிரகத்திற்கு தற்போது 'பிளானெட் நைன்' (ஒன்பதாவது கிரகம்) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரம், அமெரிக்கா நியூஜெர்சியின் மேம்பட்ட ஆய்வு நிறுவன விஞ்ஞானி சிஹோவோ செங் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இந்த புதிய கிரகம் தோராயமாக 700 கி.மீ. அகலம் கொண்டது. இது புளூட்டோவை விட 3 மடங்கு சிறியதாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் என்று கருதப்படும் அளவுக்கு பெரியதாக உள்ளதாகவும், எனினும் இது ஒரு குள்ள கிரகமாகக் கருதப்படும் என்று சிஹாவோ செங் கூறினார்.
இந்த கிரகம் தற்போது பூமியிலிருந்து நெப்டியூனை விட 3மடங்கு தொலைவில் உள்ளது. மேலும் அதன் மிக நீளமான சுற்றுப்பாதை பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தை விட 1,600 மடங்கு அதிகமாக நகர்ந்து, சூரிய மண்டலத்தைச் சுற்றியுள்ள பனிக்கட்டி பாறைகளின் வளையத்திற்குள் செல்கிறது.
இந்த கிரகம் கடந்த காலத்தில் நமது சூரியனைத் தவிர வேறு நட்சத்திரங்களைக் கடந்து சென்றிருக்கலாம் என்று செங் கூறினார். அதன் 25,000 ஆண்டு சுற்றுப்பாதையில், இந்தப் பொருள் பூமிக்கு அருகில் இருப்பதால், சுமார் 0.5% நேரம் மட்டுமே காணப்படுகிறது, அதாவது தோராயமாக ஒரு நூற்றாண்டு இது ஏற்கனவே மங்கலாகி வருகிறது என்று அவர் கூறினார்.
ஜேம்ஸ் வெப், ஹப்பிள் மற்றும் அல்மா தொலைநோக்கிகள் மூலம் தங்கள் கண்டுபிடிப்பைச் சுட்டிக் காட்ட ஆராய்ச்சியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் 23 வயதான சாம் டீன் என்ற வானியலாளர், பழைய தரவுத்தொகுப்புகள் மூலம் இந்த புதிய கிரகத்தை கண்காணித்து உள்ளார். இந்த கிரகம் கடந்த தசாப்தத்தில் வெளிப்புற சூரிய மண்டலத்தில் மிகவும் சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார். "பெரிய தொலை நோக்கிகள் பிரபஞ்சத்தின் விளிம்பிற்கு கிட்டத்தட்ட பார்க்கக்கூடிய ஒரு சகாப்தத்தில் நாம் இருக்கி றோம். ஆனால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது பெரும்பாலும் தெரியவில்லை என்று செங் கூறினார்.
நன்றி: times of india
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.