சார்ஜிங் கேஸுடன் ஸ்மார்ட்னஸ்... JBL Tour Pro 3 நாய்ஸ் கேன்சலேஷன் இயர்போன்!

பெரும்பாலான இயர்போன் சார்ஜிங் கேஸ்கள் வெறும் பவர் பேங்க்களாக மட்டுமே இருக்கும் நிலையில், JBL Tour Pro 3-ன் கேஸ் 1.57 இன்ச் வண்ணத் தொடுதிரையுடன் வருகிறது. இது இயர்போன்களைக் கட்டுப்படுத்தும் தனிப்பட்ட சாதனமாகச் செயல்படுகிறது.

பெரும்பாலான இயர்போன் சார்ஜிங் கேஸ்கள் வெறும் பவர் பேங்க்களாக மட்டுமே இருக்கும் நிலையில், JBL Tour Pro 3-ன் கேஸ் 1.57 இன்ச் வண்ணத் தொடுதிரையுடன் வருகிறது. இது இயர்போன்களைக் கட்டுப்படுத்தும் தனிப்பட்ட சாதனமாகச் செயல்படுகிறது.

author-image
WebDesk
New Update
jbl tour pro 3

சார்ஜிங் கேஸுடன் ஸ்மார்ட்னஸ்... ஜே.பி.எல். டூர் ப்ரோ 3; நாய்ஸ் கேன்சலேஷன் இயர்போன்!

JBL Tour Pro 3 இயர்போன்கள் சந்தையில் தனித்து நிற்கக் காரணம் அதன் புதுமையான ஸ்மார்ட் சார்ஜிங் கேஸ். பெரும்பாலான இயர்போன்கள் தங்கள் சார்ஜிங் கேஸ்களை வெறும் பேட்டரி பவர் பேங்க்காக மட்டுமே பயன்படுத்தும் நிலையில், JBL ஒருபடி மேலே சென்று, இந்த கேஸை இயர்போன்களின் கட்டுப்பாட்டு மையமாக மாற்றியுள்ளது. இந்த ஸ்மார்ட் கேஸ் எப்படி இயர்போன் அனுபவத்தை மாற்றுகிறது என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Advertisment

தனித்துவமான தொடுதிரை அனுபவம்:

JBL Tour Pro 3-ன் சார்ஜிங் கேஸில் உள்ள 1.57 இன்ச் வண்ணத் தொடுதிரை (color touchscreen display)தான் இதன் மிக முக்கியமான அம்சம். சிறிய ஸ்மார்ட்வாட்ச் போன்ற இந்தத் திரை, உங்கள் ஸ்மார்ட்போனை எடுக்காமலேயே பல செயல்பாடுகளைச் செய்ய அனுமதிக்கிறது. வழக்கமாக, இயர்போன்களின் அமைப்புகளை மாற்ற (அ) செயல்பாடுகளை கட்டுப்படுத்த உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலியைத் திறக்க வேண்டும். ஆனால் Tour Pro 3 உடன், நீங்கள் Auracast ஐ இயக்க, பிற சாதனங்களுடன் இணைக்க, ஈக்வலைசர் (equaliser) மோடுகளை மாற்ற, அல்லது நாய்ஸ்-கேன்சலிங் (noise-cancelling) மோடிலிருந்து டாக்-த்ரூ (talkthrough) மோடிற்கு மாற ஸ்மார்ட் கேஸ் திரை பயன்படுத்தலாம். இது மிகவும் வசதியானது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Advertisment
Advertisements

குறிப்பாக உங்கள் போன் அருகில் இல்லாதபோது அல்லது உடற்பயிற்சி செய்யும்போது. இந்தத் திரைஉங்கள் விருப்பப்படி தனிப்பயனாக்கலாம். உங்கள் சொந்தப் படங்களை முகப்புத் திரையாக வைக்கலாம். உங்களுக்குத் தேவையில்லாத சில திரைகளை நீக்கலாம். இது கேஸை உங்கள் தனிப்பட்ட ரசனைக்கு ஏற்ப மாற்ற அனுமதிக்கிறது.

பயனுள்ள அம்சங்கள்:

இந்த ஸ்மார்ட் கேஸ் சௌகரியமான கருவி என்பதைத் தாண்டி, ஒரு நடைமுறைத் தீர்வாகவும் செயல்படுகிறது. பல அம்சங்களைச் செய்ய போனை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. இயர்போன்களை கேஸில் இருந்து எடுக்கும் முன்போ அல்லது எடுத்த பிறகோ, கேஸ் திரையிலேயே தேவையான மாற்றங்களைச் செய்யலாம். ஒவ்வொரு இயர்போனின் பேட்டரி நிலையையும், கேஸின் பேட்டரி நிலையையும் திரையிலேயே தெளிவாகக் காட்டுகிறது. இது எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை அறிய உதவுகிறது.

ஸ்மார்ட் சார்ஜிங் கேஸ் சிறந்த துவக்கம் என்றாலும், இன்னும் சில மேம்பாடுகளுக்கு இடமுண்டு. தற்போது, முகப்புத் திரைக்குப் பதிலாக, ப்ளே ஆகும் பாடலின் பெயரை அல்லது ஆல்பம் கலையைக் காட்டினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும். பாடலின் பெயரை அறிய, திரையை அன்லாக் செய்து, வால்யூம் பக்கத்திற்குச் செல்ல வேண்டும். ஒருவேளை எதிர்காலத்தில் அழைப்புகள், மெசேஜ்கள் போன்ற சில அறிவிப்புகளை இந்தத் திரையில் காண்பிக்க முடிந்தால், அது கூடுதல் வசதியாக இருக்கும்.

JBL Tour Pro 3 இன் ஸ்மார்ட் சார்ஜிங் கேஸ், வெறுமனே இயர்போன்களை சார்ஜ் செய்யும் ஒரு பெட்டி என்பதையும் தாண்டி, ஒரு புதிய அளவிலான செயல்பாட்டுத் திறனை வழங்குகிறது. இது இயர்போன்களின் பயன்பாட்டை எளிதாக்கி, பயனர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை அளிக்கிறது. இந்த கண்டுபிடிப்பு, எதிர்கால இயர்போன் வடிவமைப்பிற்கு ஒரு புதிய போக்கைத் தொடங்கும் என்பதில் சந்தேகமில்லை.

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: