Advertisment

ஆதாரில் வீட்டு முகவரி மாற்ற வேண்டுமா? புதிய விதி கூறுவது என்ன? தெரிஞ்சுக்கோங்க!

ஆன்லைன் மூலம் ஆதாரில் உள்ள வீட்டு முகவரியை எளிதாக மாற்றம் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aadhaar card

Aadhar card

ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகும். இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. ஆதார் மிக முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. ஷாப்பிங் முதல் வங்கி பணப் பரிவர்த்தனை வரை அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் அட்டையில் பெயர், புகைப்படம், பிரத்யேக எண், வீட்டு முகவரி, செல்போன் எண் உள்பட முக்கிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

Advertisment

இந்தநிலையில், நீங்கள் வேலை காரணமாக வேறு இடத்திற்கு சென்று விட்டாளோ? அல்லது பிற காரணங்களுக்காக வேறு வீட்டிற்கு சென்று விட்டால் அந்த வீட்டின் முகவரிக்கு ஆதார் மாற்ற விரும்பினால் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் உங்களுடைய புது முகவரிக்கு ஆதார் மாற்றலாம். இந்த நடைமுறையில் மத்திய அரசின் (UIDAI)புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்து இங்கு பார்ப்போம்.

மத்திய அரசின் UIDAI செவ்வாயன்று அறிவிப்பு வெளியிட்டது. அதில், குடும்பத் தலைவரின் ஒப்புதலின் படி ஆன்லைனில் முகவரி அப்பேட் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. ஆதார் அட்டையின் முகவரியை குடும்பத் தலைவரின் ஒப்புதலின் படி ஆன்லைனில் அப்டேட் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளது.

The Head of the Family (HoF)அடிப்படையிலான ஆதார் புதுப்பிப்பிற்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறுகிறது. பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் அல்லது வேறு இடங்களில் இருக்கும் மக்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான UIDAI-ன் https://uidai.gov.in/ என்ற பக்கத்திற்கு சென்று ஆதார் அப்டேட் செய்யலாம். My Aadhar> Update Your Aadhar section> 'Update Demographics Data and Check Status' என்ற பக்கம் சென்று அதன் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து வீட்டு முகவரியை மாற்றவும். இதற்காக சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.

அதன்பின்னர் service request number (SRN)அனுப்பபடும். வீட்டு முகவரி மாற்றம் குநித்து HOF-விற்கு SMS அனுப்பபடும்.

அதன்பின்னர் அதிகாரிகளால் கோரிக்கை சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்படும். 60 முதல் 90 நாட்களில் புதுப்பிப்பு கோரிக்கை செயலாக்கப்பட்டு ஆதார் முகவரி மாற்றம் செய்யப்பட்டு தபாலில் அனுப்பபடும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Aadhaar Card Aadhaar Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment