Aadhaar and pan card link Tamil News: ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான கடைசி நாள் (மார்ச் 31ம் தேதி) நேற்று தான் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும் ஆதார் மற்றும் பான் எண்களை இணைக்கவில்லை என்றால், இரண்டு ஆவணங்களையும் இணைக்க ரூ .1,000 வரை அபராதம் செலுத்த வேண்டும் கூறியிருந்தது. அதோடு இரண்டு எண்களையும் இணைக்காதவர்களின் பான்கார்டு மார்ச் 31, 2021 க்குப் பிறகு 'செயல்படாது’ என்றும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, இரண்டு எண்களையும் இணைக்காதவர்கள் நேற்று காலை முதல் மத்திய அரசின் இணையப்பக்கத்தில் அவசர அவசரமாக 'அப்லோட்' செய்யத் துவங்கினர். ஏற்கனவே இணைக்காத இந்தியா முழுவதும் இருந்த மக்கள் ஒரே நேரத்தில் நேற்று முயற்சி செய்ததால் இணையப்பக்கம் சுத்தமாக முடங்கியது.
இந்த நிலையில், 'தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால், பான்கார்டு-ஆதார் இணைக்கும் சேவைக்கு ஜூன் 30ம் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்படுகிறது' என்று நேற்று மாலை 6 மணியளவில் வருமான வரித்துறை அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பான்கார்டுடன் ஆதார் எண்ணை எவ்வாறு இணைப்பது என்பது குறித்து இங்கு காணலாம்.
பான்கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது, வருமான வரி மின்-தாக்கல் போர்டல் மூலமாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ செய்யலாம்.
- பான்கார்டை ஆதார் எண்ணுடன் எப்படி இணைப்பது?
முதலில் வருமான வரி மின்-தாக்கல் போர்டல் வலைத்தளத்திற்குச் செல்லவும். (www.incometaxindiaefiling.gov.in) .அதில் உங்கள் இடக்கை புறமாக இருக்கும் 'ஆதார் இணைக்கவும்' என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
இப்போது பின்வரும் விவரங்களை உள்ளிடவும்:
பான் கார்டு எண்
ஆதார் அட்டை எண்
ஆதார் அட்டையில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளபடி பெயர் (எழுத்துப்பிழை தவறுகளைத் தவிர்க்கவும்)
வழங்கப்பட்ட ஆதார் பெயரின் முரண்பாடுகள் ஏற்பட்டால் ஆதார் OTP தேவைப்படும் என்பதை நினைவில் கொள்க. பான் மற்றும் ஆதாரில் பிறந்த தேதி மற்றும் பாலினம் பொருந்த வேண்டும்.
2. கணக்கில் உள்நுழைவது எப்படி?
உள்நுழைவு ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, வருமான வரி தாக்கல் செய்யும் போர்ட்டலில் பதிவுசெய்து வருமான வரித் துறையின் மின்-தாக்கல் போர்ட்டலில் உள்நுழைய வேண்டும்.
அந்த இணைய பக்கத்தில் உள்நுழைந்த பிறகு, உங்கள் பான் கார்டை உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கும்படி கேட்கும் பாப்-அப் சாளரம் தோன்றும். நீங்கள் பாப்அப்பைக் காணவில்லையெனில், ‘சுயவிவர அமைப்புகள்’ என்ற பெயரில் உள்ள மேல் பட்டியில் உள்ள நீல தாவலுக்குச் சென்று, ‘இணைப்பு ஆதார்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைக் கொண்டு திரையில் பெயர், பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்களைச் சரிபார்க்கவும். விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு “இப்போது இணைக்கவும்” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
இப்போது உங்கள் ஆதார் எண் உங்கள் பான் கார்டுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளதாக பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும்.
- எஸ்எம்எஸ் வழியாக ஆதார் மற்றும் பான் இணைத்தல்
உங்கள் ஆதார் மற்றும் பான் ஐ எஸ்எம்எஸ் மூலம் இணைக்க, பின்வரும் வடிவத்தைப் பயன்படுத்தி, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 567678 அல்லது 56161 க்கு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பவும்.
உதாரணமாக, UIDPAN<12 digit Aadhaar><10 digit PAN> அல்லது UIDPAN 123456789123 AKPLM2124M என்று உங்கள் மொபைலில் டைப் செய்து அனுப்பவும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " ( https://t.me/ietamil )
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.