ஆதார் அட்டை மிக முக்கிய அடையாள அட்டையாகும். அனைத்து துறைகளிலும் ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் எண் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் உங்கள் வங்கி கணக்கு உடன் ஆதார் எண் இணைப்பதும் அவசியமாகிறது. பல்வேறு சேவைகளுக்கு இது பயன்படும். குறிப்பாக வங்கி KYC நடைமுறை, வங்கி கடன் பெறுவது, அரசு உதவித் தொகை, வருவான வரி ரிட்டன்ஸ் என அனைத்திற்கும் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகிறது. அந்த வகையில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் உங்களின் வங்கி கணக்கு- ஆதார் இணைப்பது குறித்துப் பார்ப்போம். எந்த வங்கி கணக்காக இருந்தாலும் இன்டர்நெட் பேங்கிங், ஏ.டி.எம் மூலம் இணைக்கலாம்.
இன்டர்நெட் பேங்கிங் மூலம் வங்கி கணக்கு- ஆதார் இணைப்பு
1. முதலில் உங்கள் இன்டர்நெட் பேங்கிங் கணக்கை ஓபன் செய்யவும்.
2. யூசர் ஐ.டி, பாஸ்வேர்ட் உள்ளிட்டு ஓபன் செய்யவும்.
3. இப்போது My Account பக்கம் சென்று Update Aadhaar with Bank account (CIF) என்பதை கிளிக் செய்யவும்.
4. ஆதார் பதிவு செய்ய Profile password கொடுக்கவும்.
5. இப்போது புதிய பக்கம் ஓபன் செய்யப்பட்டு அதில் உங்கள் ஆதார் எண் 2 முறை கேட்கப்படும் அதை கொடுக்கவும்.
6. ஆதார் எண் டைப் செய்த பிறகு Submit கொடுக்கவும்.
7. அவ்வளவு தான் இப்போது, உங்கள் ஆதார் எண் இணைக்கப்படும். உங்களுக்கு இதுகுறித்து மெசேஜ் அனுப்பப்படும்.
ஏ.டி.எம் மூலம் இணைப்பது எப்படி?
- ஏ.டி.எம் சென்று உங்கள் கார்ட் செலுத்தி பின் நம்பர் போடவும்.
2. Serivces மெனு சென்று Registration ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
3. Aadhaar Registration என்பதை கிளிக் செய்யவும்.
4. உங்களின் அக்கவுண்ட் டைப் (Savings or current) செலக்ட் செய்து 12 இலக்க ஆதார் எண் கொடுக்கவும்.
5. மீண்டும் ஒரு முறை ஆதார் எண் என்டர் செய்து ஓகே பட்டன் கொடுக்கவும்.
6. அவ்வளவு தான் இப்போது, உங்கள் ஆதார் எண் இணைக்கப்படும். உங்கள் மொபைல் எண்ணிற்கு இதுகுறித்து மெசேஜ் அனுப்பப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“