/tamil-ie/media/media_files/uploads/2022/06/Aadhar.jpg)
Aadhaar - Voter ID link
ஆதார் மிக முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. வங்கி, வருமான வரி தாக்கல், வாக்காளர் அடையாள அட்டை, செல்போன் பயன்பாடு, ரயில் டிக்கெட் என அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் முக்கிய ஆவணமாக மாறிவிட்டது. முன்பு ரேஷன் கார்டு இருந்தது போல் ஆதார் அட்டை இப்போது மாறிவிட்டது. இந்திய குடிமகன் என்பதற்கு ஆதார் அட்டை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவகையில் ஒவ்வொருவரும் தங்களது ஆதாருடன் 10 இலக்க மொபைல் எண்ணை இணைப்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதை செய்வது மிகவும் எளிது. ஆதாரில் உங்கள் செல்போன் எண் சேர்ப்பது அல்லது ஏற்கனவே உள்ள எண்ணை மாற்றுவது இவ்விரண்டையும் குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
ஆதாரில் உங்கள் பழைய செல்போன் எண் மாற்றுவது எப்படி?
இதை ஆன்லைனில் செய்ய முடியாது. அருகிலுள்ள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும்.
அங்கு ஆதார் புதுப்பிப்பு/திருத்தம் செய்வதற்கான படிவத்தை வாங்கி நிரப்பவும்.
பின் ஆதார் நிர்வாகியிடம் சமர்ப்பிக்கவும்.
சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.
Update Request Number (URN) அடங்கிய ஒப்புகை சீட்டை ஆதார் நிர்வாகி வழங்குவார்.
இந்த எண் பயன்படுத்தி விண்ணப்பத்தின் நிலையை பார்த்துக் கொள்ளலாம்.
90 நாட்களுக்குள் புதிய எண் UIDAI தளத்தில் புதுப்பிக்கப்பட்டுவிடும்.
ஆதாரில் முதல் முறையாக செல்போன் எண் பதிவிடுவது எப்படி?
அருகிலுள்ள ஆதார் மையத்தை அணுகவும்.
ஆதார் புதுப்பிப்பு/திருத்தம் படிவத்தை நிரப்பவும்.
நீங்கள் ஆதாருடன் இணைக்க விரும்பும் செல்போன் எண்ணை படிவத்தில் நிரப்பவும்.
ஆதார் நிர்வாகியிடம் படிவத்தை சமர்ப்பிக்கவும்.
நிர்வாகி உங்கள் விவரங்களை சரிபார்த்து அங்கீகரிப்பார்.
இதற்கு சேவை கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படும்.
செல்போன் எண் ஆதாருடன் இணைக்கப்பட்ட பிறகு, UIDAI சேவைகளை ஆன்லைனில் பயன்படுத்தலாம். PAN கார்டு விண்ணப்பம், DigiLocker, உமாங் ஆப் , மியூச்சுவல் ஃபண்ட், ஆன்லைன் EPF க்ளைம் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகிய வசதிகளை பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.