ஆன்லைனில் இலவசமாக ஆதார் கார்டு அப்டேட் செய்வதற்கான சேவையை மத்திய அரசின் UIDAI மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து அறிவித்துள்ளது. அதன் படி மார்ச் 14,2024 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு வழங்கியுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. அதன்படி 'MyAadhaar Portal' தளத்தில் இலவசமாக ஆதார் அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் நேரடியாக ஆதார் மையம் சென்று அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது. உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
எனினும் Biometric தகவல்கள் போட்டோ, கண் கருவிழி ஸ்கேனிங் ஆகியவைகள் நேரடியாக ஆதார் மையம் சென்று தான் செய்ய முடியும்.
ஆன்லைனில் உங்கள் முகவரி, பெயர், பிறந்த தேதி, போன் நம்பர், இ-மெயில் ஐ.டி உள்ளிட்டவற்றை அப்டேட் செய்யலாம். நினைவில் கொள்ளுங்கள் ஆதார் அப்டேட் செய்வது வேறு திருத்தம் செய்வது வேறு. ஆதார் அப்டேட் (Demographic தரவுகள் ) மட்டுமே நீங்கள் ஆன்லைனில் செய்ய முடியும்.
1. uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அங்கு "My Aadhaar" என்ற டேப் கிளிக் செய்து "Update Your Aadhaar" கொடுக்கவும்.
3. இப்போது அப்டேட் ஆதார் விவரம் (ஆன்லைன்) பக்கத்திற்கு கொண்டு செல்லும். அடுத்து Proceed to Update Aadhaar" என்பதை கிளிக் செய்யவும்.
4. இப்போது உங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் அங்குள்ள கேப்ட்சா வெரிவிக்கேஷன் கோடை கொடுத்து Send OTP கொடுக்கவும்.
5. உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பி யை கிளிக் செய்து லாக்கின் செய்யவும்.
6. அடுத்த பக்கத்தில் உங்கள் Demographic தரவுகளில் எதை அப்டேட் செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்து குறிப்பிடவும்.
7.அடுத்து கேட்டக்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து அப்லோடு செய்ய வேண்டும்.
8. அவ்வளவு தான் இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு service request numberஅனுப்பபடும், அதை கொண்டு ஸ்டேட்டஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.