ஆதார் மத்திய அரசால் வழங்கப்படும் மிக முக்கிய அடையாள அட்டையாகும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமானது. அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை செப்டம்பர் 14 வரை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.
இதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு பல முறை நீட்டித்து வழங்கி உள்ளது.
ஆன்லைனில் ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
- “https://myaadhaar.uidai.gov.in” என்ற இணைய பக்கம் செல்லவும்.
2. அதில் வரும் முதல் பக்கத்தில், உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு, கார்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP -ஐ உள்ளிடவும்.
3. அடுத்து உங்கள் முகவரி, அடையாளங்களை சரிபார்ககவும்.
4. இப்போது உங்கள் முகவரி, எண்ணை மாற்ற வேண்டும் என்றால், அங்குள்ள drop-down மெனுவை கிளிக் செய்து முகவரி, எண் மாற்றுவதற்கான ஆவணங்கள் சமர்பிக்கவும்.
5. இதை செய்த பின் உங்கள் கோரிக்கை ரிவ்யூ செய்யப்படும், அதன் பின் Service Request Number (SRN), அனுப்படும். இதன் மூலம் உங்கள் அப்டேட்டை டிராக் செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil