ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டை செய்வதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. முன்னதாக மார்ச் 14,2024 வரை கொடுக்கப்பட்ட கால அவகாசம் தற்போது ஜுன்14, 2024 வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களின் கோரிக்கையை ஏற்று கால நீட்டிப்பு வழங்கியுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது. அதன்படி 'MyAadhaar Portal' தளத்தில் இலவசமாக ஆதார் அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் நேரடியாக ஆதார் மையம் சென்று அப்டேட் செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் புதுப்பிப்பது அவசியமாகிறது. உங்கள் ஆதார் டேட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அந்த வகையில் ஆதாரின் Demographic தரவுகளை கட்டணம் ஏதும் இல்லாமல் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆன்லைனில் இலவசமாக ஆதார் அப்டேட் செய்வது எப்படி?
1. uidai.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
2. அங்கு "My Aadhaar" என்ற டேப் கிளிக் செய்து "Update Your Aadhaar" கொடுக்கவும்.
3. இப்போது அப்டேட் ஆதார் விவரம் (ஆன்லைன்) பக்கத்திற்கு கொண்டு செல்லும். அடுத்து Proceed to Update Aadhaar" என்பதை கிளிக் செய்யவும்.
4. இப்போது உங்கள் ஆதார் கார்டு எண் மற்றும் அங்குள்ள கேப்ட்சா வெரிவிக்கேஷன் கோடை கொடுத்து Send OTP கொடுக்கவும்.
5. உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஓ.டி.பியை கிளிக் செய்து லாக்கின் செய்யவும்.
6. அடுத்த பக்கத்தில் உங்கள் Demographic தரவுகளில் எதை அப்டேட் செய்ய வேண்டும் என்பதை கிளிக் செய்து குறிப்பிடவும்.
7.அடுத்து கேட்டக்கப்பட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து அப்லோடு செய்ய வேண்டும்.
8. அவ்வளவு தான் இப்போது உங்கள் மொபைல் எண்ணுக்கு service request numberஅனுப்பபடும், அதை கொண்டு ஸ்டேட்டஸ் டிராக் செய்து கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“