சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் மற்றும் கே.ஒய்.சி விவரங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும் எனவும் இதை செய்யாவிட்டால் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இலவச கேஸ் இணைப்பை பெற்றுள்ளனர்.
இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு ரூ.500 சிலிண்டரும், இந்த திட்டத்தில் இல்லாதவர்களுக்கு ரூ.800 விலையில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு வைத்திருப்பவர்கள் தங்களது ஆதார் மற்றும் கே.ஒய்.சி விவரங்களை சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாரத் கேஸ், இண்டேன், ஐ.ஓ.சி உள்ளிட்ட மத்திய அரசால் வழங்கப்படும் அனைத்து கேஸ் ஏஜென்சி வாடிக்கையாளர்களும் இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரத் கேஸ் ஏஜென்சி எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளது.
ஜூலை 27-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட ஏஜென்சிக்கு சென்று வாடிக்கையாளர்கள் ஆதார் மற்றும் கே.ஒய்.சி விவரங்களை பதிவு செய்ய வேண்டும், இல்லையெனில் சிலிண்டர் இணைப்பு ரத்து செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“