தமிழகத்தில் மின் நுகர்வோர் எண் – ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆன்லைனில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ அரசின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் மின் இணைப்பு – ஆதார் இணைக்கலாம். அல்லது அரசின் சிறப்பு முகாம்களுக்கு சென்று இ.பி – ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம்.
- ஆன்லைனில் இணைத்தால் முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையபக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிடவும்.
- அடுத்து மின் இணைப்புடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிடவும். அந்த எண்ணிற்கு OTP வரும். அதை கொடுத்து ஆதார் எண், ஆதாரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- பின்னர் திரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.
இப்போது, மின் இணைப்பு அல்லது ஆதாருடன் கொடுக்கப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இல்லை அல்லது சிம் தொலைந்து விட்டது என்றால், கவலை வேண்டாம். நீங்களும் இ.பி- ஆதார் எண் இணைக்கலாம். இவ்வாறு இருந்தால், ஆன்லைனில் இ.பி – ஆதார் எண் இணைக்கும் போது, தற்போது உங்களிடம் இருக்கும் எண்ணை பதிவிட்டால், அந்த நம்பருக்கு OTP வரும். அதை பயன்படுத்தி இ.பி – ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil