Advertisment

Aadhar- EB Link: மொபைல் எண் மாற்றி இருந்தால் ஆதார்- இ.பி எப்படி இணைப்பது?

இ.பி – ஆதார் எண் இணைக்கும் போது OTP எண் தேவைப்படும். இந்தநிலையில், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மாற்றி இருந்தால், என்ன செய்வது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
New website address for Aadhaar electricity number link has been announced

தமிழகத்தில் மின் நுகர்வோர் எண் – ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இலவச மின்சாரம், மானிய விலை மின்சாரம் என அனைத்து பயனர்களும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும். ஆன்லைனில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ அரசின் அதிகாரப்பூர்வ இணையபக்கத்தில் மின் இணைப்பு – ஆதார் இணைக்கலாம். அல்லது அரசின் சிறப்பு முகாம்களுக்கு சென்று இ.பி - ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம்.

Advertisment
  1. ஆன்லைனில் இணைத்தால் முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையபக்கத்திற்கு சென்று உங்கள் மின் இணைப்பு எண்ணை பதிவிடவும்.
  2. அடுத்து மின் இணைப்புடன் கொடுக்கப்பட்டுள்ள மொபைல் நம்பரை பதிவிடவும். அந்த எண்ணிற்கு OTP வரும். அதை கொடுத்து ஆதார் எண், ஆதாரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  3. பின்னர் திரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை பூர்த்தி செய்து சப்மிட் கொடுக்க வேண்டும்.

இப்போது, மின் இணைப்பு அல்லது ஆதாருடன் கொடுக்கப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இல்லை அல்லது சிம் தொலைந்து விட்டது என்றால், கவலை வேண்டாம். நீங்களும் இ.பி- ஆதார் எண் இணைக்கலாம். இவ்வாறு இருந்தால், ஆன்லைனில் இ.பி – ஆதார் எண் இணைக்கும் போது, தற்போது உங்களிடம் இருக்கும் எண்ணை பதிவிட்டால், அந்த நம்பருக்கு OTP வரும். அதை பயன்படுத்தி இ.பி - ஆதார் எண் இணைத்துக் கொள்ளலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment