ஒரு ஹாய் சொன்னால் போதும்... வாட்ஸ்அப் மூலம் ஒரே நிமிடத்தில் ஆதார் கார்டு பெறலாம்!

ஆதார் அட்டை, அரசின் முக்கிய சேவைகளுக்கு பயன்படும் ஓர் அத்தியாவசிய அடையாள ஆவணம். இப்போது வாட்ஸ்அப் வழியாக எளிதாகவும், பாதுகாப்பாகவும் டவுன்லோடு செய்யலாம்.

ஆதார் அட்டை, அரசின் முக்கிய சேவைகளுக்கு பயன்படும் ஓர் அத்தியாவசிய அடையாள ஆவணம். இப்போது வாட்ஸ்அப் வழியாக எளிதாகவும், பாதுகாப்பாகவும் டவுன்லோடு செய்யலாம்.

author-image
WebDesk
New Update
download Aadhaar Card using WhatsApp

ஒரு ஹாய் சொன்னால் போதும்... வாட்ஸ்அப் மூலம் நிமிடத்தில் ஆதார் கார்டு பெறலாம்!

இந்திய அரசின் பல்வேறு சேவைகளுக்கும், நிதி சார்ந்த பரிவர்த்தனைகளுக்கும், அன்றாட அடையாள சரிபார்ப்புக்கும் மிகவும் அவசியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது. வழக்கமாக, ஆதார் அட்டையை UIDAI இணையதளம் (அ) DigiLocker செயலி மூலம் பதிவிறக்கம் செய்வோம். ஆனால், இப்போது வாட்ஸ்அப் வழியாக MyGov Helpdesk சாட்பாட் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்ய புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆஃப்கள் இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல், பாதுகாப்பாக ஆதார் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை எளிதாகப் பெறலாம்.

Advertisment

வாட்ஸ்அப் வழியாக உங்கள் ஆதார் அட்டையைப் பதிவிறக்கம் செய்ய, பின்வரும் விஷயங்கள் உங்களிடம் இருக்க வேண்டும். ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், ஒரு செயலில் உள்ள DigiLocker கணக்கு (இல்லையெனில், DigiLocker இணையதளம் அல்லது செயலி மூலம் புதிதாக உருவாக்கிக் கொள்ளலாம்). அதிகாரப்பூர்வ MyGov Helpdesk வாட்ஸ்அப் எண்: +91-9013151515-ஐ உங்கள் மொபைலில் சேமித்திருக்க வேண்டும்.

வாட்ஸ்அப் மூலம் ஆதார் பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள்:

+91-9013151515 என்ற எண்ணை உங்கள் மொபைல் தொடர்புகளில் "MyGov Helpdesk" என சேமித்துக் கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பைத் திறந்து, இந்த எண்ணுடன் ஒரு உரையாடலைத் தொடங்குங்கள்.

உரையாடலைத் தொடங்க "Namaste" அல்லது "Hi" என டைப் செய்யுங்கள்.

அடுத்ததாக, "DigiLocker சேவைகள்" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு ஏற்கனவே DigiLocker கணக்கு உள்ளதா? உறுதிப்படுத்தவும். இல்லையெனில், தொடர்வதற்கு முன் கணக்கை உருவாக்கவும்.

சரிபார்ப்புக்காக, உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

Advertisment
Advertisements

உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ வாட்ஸ்அப் சாட்டில் உள்ளிடவும்.

சரிபார்க்கப்பட்டதும், உங்கள் DigiLocker கணக்கில் உள்ள ஆவணங்களின் பட்டியலை சாட்பாட் காண்பிக்கும்.

பட்டியலில் இருந்து ஆதார் அட்டையைத் தேர்ந்தெடுத்து, அதனுடன் தொடர்புடைய எண்ணை டைப் செய்யவும்.

உங்கள் ஆதார் அட்டை உடனடியாக PDF வடிவத்தில் வாட்ஸ்அப் உரையாடலில் பெறப்படும்.

ஒரு நேரத்தில் ஒரு பைலை மட்டுமே டவுன்லோடு செய்ய முடியும். மேலும், DigiLocker-ல் ஏற்கனவே இணைக்கப்பட்ட பைல்களை மட்டுமே இந்தச் சேவை மூலம் பெற முடியும். உங்கள் ஆதார் அல்லது பிற ஆவணங்கள் இணைக்கப்படாமல் இருந்தால், முதலில் DigiLocker இணையதளம் அல்லது செயலி மூலம் அவற்றை இணைத்த பிறகு, வாட்ஸ்அப் வழியாகவும் அணுகலாம்.

Technology Aadhaar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: