மத்திய அரசு ஆதார்- பான் இணைக்கப்பதை கட்டயாமாக்கியுள்ளது. இதற்கான கால அவகாசம் மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜுன் 30-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. அந்த வகையில் பான் கார்டு, ஆதார் கார்டில் திருத்தம் இருந்தால் அதை சரி செய்ய உடனடியாக இணைக்க வேண்டும். ஆதாருடன்- பான் இணைக்கப்படாவிட்டால் பான் கார்டு செல்லாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் ஆதாருடன் தவறான பான் கார்டு எண் இணைக்கப்பட்டால் அதை முதலில் சரி செய்து சரியான எண்ணுடன் இணைக்க வேண்டும். அது குறித்து இங்கு பார்ப்போம்.
டூபிளிக்கெட் பான் எண், போலி எண், தொழில்நுட்ப கோளாறு, வேறு ஏதாவது காரணங்கள் ஆகியவைகள் ஆதாருடன்- தவறான பான் இணைக்க காரணங்களாக உள்ளன. இந்த நேரங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்ட தவறான ஆதாரை முதலில் delink செய்ய வேண்டும். அதன்பின் இணைக்க வேண்டும்.
ஆதார்- பான் delink செய்வது
ஒரே பான் எண் மற்றொரு நபருக்கும் வழங்கப்பட்டிருந்தால் என்ன செய்வது?
- முதலில் பான் கார்டு சேவை வழங்குநரிடமிருந்து இடமிருந்து பான் அட்டை செயலாக்க விவரங்களைப் பெற வேண்டும்.
- தன்னுடைய பான் எண்ணை வைத்துள்ள மற்ற நபரின் விவரங்களைப் பெற வேண்டும்.
- வருமான வரித் துறைக்கு இது தொடர்பாக உரிய ஆவணங்களை வழங்க வேண்டும்.
- அதன் பின் புதிய பான் கார்டுக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.
2 பான் கார்டு வைத்திருந்தால் என்ன செய்வது?
- முதலில் பான் கார்டு நிலையைச் சரிபார்க்க வருமான வரித் துறையின் மொபைல் செயலி CBN மூலம் தெரிந்து கொள்ளவும்.
- இரண்டு பான் கார்டுகளும் செயலில் இருந்தால், உங்கள் ஆதார் எந்த பானுடன் இணைக்க வேண்டும் என்பதை உரிய செய்து ஒரு பான் கார்ட்டை பயன்படுத்தவும். வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
- இதற்கான உரிய ஆவணங்களை வருமான வரித் துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும்.